அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுஷ்மா ஸ்வராஜ்!ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொலை…..
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டதாக மக்களவையில்இன்று தெரிவித்தார்.
ஈராக்கில் உள்ள மொசூல் நகரம் கடந்த 2014–ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போது அந்தப் பகுதியில் பணிபுரிந்த இந்திய தொழிலாளர்கள் 39 பேர் கடத்திச் செல்லப்பட்டனர். இவர்களின் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த ஹர்ஜித் என்பவர், கடத்தப்பட்ட 39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர் எனக் கூறியிருந்தார்.
‘ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை’ என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார்.
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். ஈராக்கில் இருந்து அவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், கடத்தப்பட்ட 39 பேரும் பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் மாநிலங்க ளைச்சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.