அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்ட நிதி ஆயோக்!இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் குடிநீர் பிரச்சனை!குடிநீர் கிடைக்காமல் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழப்பு!
நிதி ஆயோக் அமைப்பு, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, தற்போது கடும் தண்ணீர் பிரச்சனை இருப்பதாகவும், ஆண்டுதோறும் தூய்மையான குடிநீர் கிடைக்காமல் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2030ஆம் ஆண்டில் இந்தியாவின் தண்ணீர் தேவை இருமடங்காக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் சூழல் ஏற்படும் என்றும், தண்ணீர் பிரச்சனையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் நிதி ஆயோக் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 60 கோடி பேர், நாள்தோறும் தண்ணீர் பிரச்சனையை சந்தித்து வருவதாக கூறியுள்ள நிதி ஆயோக், தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகப்படுத்த வேண்டியது அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.