அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!விளையாட்டு வீரர்கள் தங்கள் சம்பாத்தியத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும்!
விளையாட்டு வீரர்கள் தங்கள் சம்பாத்தியத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை ஹரியானாவில் மாநிலத்தின் விளையாட்டு முன்னேற்றத்துக்காக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியிட்ட அரசாணையில், விளையாட்டு வீரர்கள் தங்கள் தொழிலிலும், வணிகரீதியான ஒப்பந்தங்கள் மூலமும் கிடைக்கும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு நிதியை மாநில விளையாட்டு கவுன்சிலில் செலுத்த வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
ஊதியமற்ற அசாதாரண விடுப்பில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்கும் தொகையில் மூன்றில் ஒரு பங்கையும், ஊதியத்துடன் விடுப்பில் செல்பவர்கள் முழுத் தொகையையும் ஹரியானா விளையாட்டுக் கவுன்சிவில் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில விளையாட்டு வளர்ச்சிக்கு என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.