அதிரடியாக கலைக்கப்படட தெலுங்கானா சட்டப்பேரவை…!ஆளுநர் அனுமதி..!இடைக்கால முதல்வராக சந்திரசேகரராவ்….!

Default Image

தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்க சந்திரசேகர ராவ் அளித்த அமைச்சரவை பரிந்துரையை ஏற்றார் அம்மாநில ஆளுநர் நரசிம்மன்

பல வருட போராட்டங்களுக்குப் பின் ஒன்றாக இருந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனிடையே கடந்த  2014- ஜூன் மாதம் 2-ம் தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா மாநிலம்உருவானது. அப்போது நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருகிறது.

Related image

இந்நிலையில் தெலுங்கானவிற்கு  அடுத்த ஆண்டு மே மாதம் , சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் இரண்டும் நடக்கவுள்ளது. இந்நிலையில், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டார்.
Image result for telanGANA governor

தற்போது  தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்க அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளது.இந்நிலையில் தெலங்கானா சட்டசபையை கலைக்க சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரையை அம்மாநில ஆளுநர் நரசிம்மனிடம் அளித்தார் முதல்வர் சந்திரசேகர ராவ்.

தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்க சந்திரசேகர ராவ் அளித்த அமைச்சரவை பரிந்துரையை ஏற்றார் அம்மாநில ஆளுநர் நரசிம்மன்.

இதனால்  சந்திரசேகர ராவ்  தலைமையிலான தெலங்கானா அரசு கலைக்கப்பட்டது .புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடருமாறு ஆளுநர் நரசிம்மன் விடுத்த கோரிக்கையை ஏற்றார் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்