அதிமுக எம்.பி., முத்துக்கருப்பன் ராஜினாமா…!முதலமைச்சர் சமாதானம் செய்வார்கள் என செல்ஃபோனை அனைத்து வைத்து விட்டேன் …!
அதிமுக.,வை சேர்ந்த முத்துக்கருப்பன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது எம்.பி., பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.ராஜ்யசபா எம்.பி.,யாக முத்துக்கருப்பன், தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா சபாநாயகரும் துணை குடியரசு தலைவருமான வெங்கைய்யா நாயுடுவிடம் அளிக்க உள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை செய்தியாளர்களிடம் அவர் வாசித்து காட்டினார். பின்னர் பேசிய அவர், எனது பதவி காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் மக்களுக்காக ராஜினாமா செய்கிறேன். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மிகுந்த மனவேதனையுடன் ராஜினாமா செய்கிறேன்.முதல்வர் பழனிசாமி அழைத்து என்னை சமாதானம் செய்வார் என்பதால் எனது மொபைல் போனை அணைத்து வைத்து விட்டேன். யார் சொன்னாலும் எனது முடிவில் பின்வாங்கவோ, சமாதானம் அடையவோ மாட்டேன். காவிரி நீர் பிரச்னையால் 19 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரிக்காக அதிமுக கடுமையாக போராடி வருகிறது. அரசியலுக்காக குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் இருக்கலாமா? என்னால் இதைத்தான் செய்ய முடியும். இரு மாநில பிரச்னை என்பதால் மத்திய அரசு தான் பிரச்னையை தீர்க்க வேண்டும்.காவிரி பிரச்னையில் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.