அதிமுக எம்.பி முத்துகருப்பனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க வாய்ப்பில்லை?காரணம் என்ன ?
மாநிலங்கலவை தலைவர் அதிமுக எம்.பி முத்துகருப்பனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்வதற்கான வழிமுறைகள்:
➤ தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பும் ஒரு நபர் தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி மாநிலங்களவை தலைவருக்கு அனுப்ப வேண்டும்.
➤ மாநிலங்களவை தலைவருக்கு கடிதத்தை நேரில் சென்று வழங்கி ராஜினாமாவிற்கான காரணத்தை விளக்க வேண்டும்.
➤ ராஜினாமாவை ஏற்பதும் மறுப்பதும் மாநிலங்களவை தலைவரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது.
➤ ஒருவர் அளித்த ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் ஏற்பதற்குள் திரும்ப பெறுவதற்கு ராஜினாமா செய்த உறுப்பினருக்கு அதிகாரம் உண்டு
முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதம் அதற்கான முறையான வடிவத்தில் இல்லை என்றும், இதனால் அவரது ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் ஏற்க வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதே போல் மாயாவதியின் ராஜினாமாவும் ஏற்கனவே மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.