அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்திற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை .! டெல்லி உயர்நீதிமன்றம் அதிமுக முன்னாள் எம்.பி. வழக்கு
தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்ய வேண்டும்.
இருவரும் இணைந்து கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கம் செய்ய எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.