மத்தியப் பிரதேசத்தில் அட்டைப் பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து அருகிலுள்ள ஃபோக்ஸ்வேகன் பழுதுநீக்க மையத்தில் பரவியதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கார்கள் எரிந்து சேதமடைந்தன.
குவாலியரில் அட்டைப் பெட்டித் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட, தொழிற்சாலை ஊழியர்கள் கட்டிடத்திலிருந்து வெளியேறியதோடு, அதனருகில் இருந்த ஃபோக்ஸ்வேகன் பழுதுநீக்க மையத்திலும் தகவல் கொடுத்தனர். இரு கட்டிடங்களிலும் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர்.
பழுதுநீக்க மைய்யத்தின் ஊழியர்கள் தங்களால் இயன்ற வரையிலான கார்களை வெளியே எடுத்துவந்த போதும் 7 கோடி ரூபாய் முதல் 8 கோடி ரூபாய் வரையிலான கார்கள் தீயில் எரிந்து சேதமாகியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…