அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி.!
- இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது .
- அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது . டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் மோடி , பிரேசில் அதிபர் மெசியாஸ் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் ஒவ்வொரு நாளும் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். தினமும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால் குறிப்பாக சுதந்திரதினம் , குடியரசு தினம் போன்ற சிறப்பு வாய்ந்த நாள்களில் அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சியில் கூடுதலாக இருக்கைகள் அமைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த இரு நாள்களில் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகின்றனர்.
மேலும் பல இராணுவ அதிகாரிகள் மற்றும் பஞ்சாப் இராணுவ அதிகாரிகள் ,அமைச்சர்கள் என பலர் வருவதால் கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டு ,இந்திய இராணுவ வீரர்களின் அணிவகுப்பு பார்க்கின்றனர்.இராணுவ வீரர்களின் அணிவகுப்பு பார்க்கவே கண்ணை கவரும் வகையில் இருக்கும். சுதந்திரதினம் , குடியரசு தினம் போன்ற நாள்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து வருகின்றனர்.