அடேங்கப்பா…190 செ.மீ. நீளத்திற்கு தலைமுடி வளர்த்த இளம்பெண்..! சாதனை

Default Image
  • பெண்களையே பொறாமைப்பட வைத்த இளம்பெண் நிலன்ஷி படேல்
  • 17 வயதில் 190 செ.மீ நீளத்திற்கு தலைமுடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்தார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள மோடசா பகுதியைச் சேர்ந்தவர் நிலன்ஷி படேல் இவருக்கு வயது 17 ஆகிறது. தனது தலைமுடியை நீளமாக வளர்த்து கின்னஸ் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.இது அவருக்கு இரண்டாவது கின்னஸ் சாதனை ஆகும். ஆம் சரியாக 2 வருடத்திற்கு முன் அதாவது 2018 இவருடைய முடி 170 செ.மீட்டர் வளர்ந்திருந்தது இதுவே அவருடைய முதல் கின்னஸ் சாதனையாக கருதப்பட்ட நிலையில் தான் தற்போது 190 சென்டி மீட்டர்க்கு தன் முடிவை வளர்த்து  புதிய சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அவரிடன் கேட்டப்பொழுது முடியை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் தனக்கு 6 -ஆக இருக்கும் போது ஏற்பட்டது என்றும் அதில் இருந்து முறையாக வயதில் நிலன்ஷி தனது தலைமுடியை வளர்க்க ஆரம்பித்தேன் என்று தெரிவித்தார்,மேலும் அவர் கூறுகையில் நான் எங்கு சென்றாலும் அங்கே  என்னுடன் மக்கள் செல்ஃபி எடுக்க முயற்சிக்கின்றனர்.

 இது தொடர்பாக அவர் கூறும் போது, நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சிக்கின்றனர். நான் ஒரு செலிப்ரட்டி போல் உணர்கிறேன். நிலன்ஷி டீன் ஏஜர் பிரிவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அப்போது நான் ஒரு செலிப்ரட்டி போல உணர்கிறேன் என்று தெரிவித்தார்.இந்த சாதனையை நிலன்ஷி டீன் ஏஜர் பிரிவில் நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இதற்கு முன் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஏபிரில் என்பவர்  152.5 சென்டி மீட்டர் முடி வளர்த்து சாதனை படைத்திருந்தார் அதன் பிறகு இந்த சாதனைகளை எல்லாம் கெயிட்டோ என்ற பெண் 155.5 சென்டி மீட்டர்  நீளமாக  தலைமுடி வளர்த்து முறியடித்தார்.இவர்களின்  இந்த  2 சசாதனைகளையும் 2018 ஆம் ஆண்டு நிலன்ஷி முறியடித்து சாதனை படைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்