அடுத்த 125 அடி உயர சிலை… கர்நாடக முதல்வர் குமாரசாமி…!!

Default Image
கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு 125 அடி உயர சிலை வைக்க அம்மாநில முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.
பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர்.  தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் ஜீவநதியாக விளங்கி வருவது காவிரி.  கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகி கரைபுரண்டு ஓடி தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகிகிறது. கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்துள்ளது.
இந்நிலையில், காவிரி ஆறு மீது கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணையான கிருஷ்ண ராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு சிறை நிறுவப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.  இந்த சிலை வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு தோற்றத்தை பார்வையிடும் வகையில், சுமார் 360 அடி உயர கண்ணாடி கோபுரம் கட்டமைக்கவும் முடிவு செய்துள்ளனர். தனியார் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் காவிரி தாய்க்கு சிலை நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்