இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இருந்து கொண்டு ரேஷன் பொருட்களை வாங்கும் திட்டமாக மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்கின்ற திட்டத்தை 2020 ஆண்டில் ஜன மாதத்தில் 15 தேதி அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காகஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் முதல்கட்டமாக இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இத்திட்டதிற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் அந்த எதிர்ப்புக்களை சமாளிக்க மத்திய அரசு ஒரு புதிய வியூகத்தையும் வகுத்துள்ளதாம்.இந்தியாவில் எவர் ஒருவர் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவருக்கான ரேஷன் பொருட்களை அவர் பெற்றுக் கொள்ளும் வகையில் தான் ஒரே இந்தியா ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
திட்டம் என்ன சொல்கிறது:
இந்த திட்டத்தின்படி எவர் ஒருவரும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளார் எனில் அவர் மற்றொரு மாநிலத்திலும் இந்த ரேஷன் அட்டையை கொண்டு தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும் பணி நிமித்தமாக ஒரு மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்வோருக்கும் இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் கிடைக்கின்ற வகையிலும் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரேஷன் பொருட்கள் எல்லாம் ‘பாயின்ட் ஆப் சேல்’ என்கின்ற கருவி கொண்டு ஆதார் உறுதி பார்த்தல் அல்லது கைரேகை பதிவின் மூலம் இந்தியாவில் எப்பகுதியிலும் இருந்து பொருட்கள் வாங்கும் வசதி கிடைக்கும்.உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்:அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் ஆகியவை 1 கிலோ- 1 ரூபாய் முதல்- 3 ரூபாய் வரை வழங்கப்படும். நாடு முழுவதும் 79 கோடி ரேஷன் கார்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் 3.5 கோடி பேர் பயன் அடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது ஆக மத்திய அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.
அதன் படி முதற்கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா, குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில் இது ஜன.,15ல் அறிமுகம் செய்யப்பட்டு அமல்படுத்தபட உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…