அடுத்து வருகிறது ‘ஒரே நாடு-ஒரே ரேஷன்’..ஜன.,அமல்-மாஸ்டர் பிளானோடு களமிரங்கும் மத்திய அரசு

Default Image
  • ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்கின்ற  திட்டத்தை அடுத்தாண்டு  ஜன., 15 அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • முதல்கட்டமாக இந்தியாவில் ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டவட்டம்

இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இருந்து கொண்டு ரேஷன் பொருட்களை வாங்கும் திட்டமாக மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்கின்ற திட்டத்தை 2020 ஆண்டில் ஜன மாதத்தில் 15 தேதி அமல்படுத்த  திட்டமிட்டுள்ளது. இதற்காகஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் முதல்கட்டமாக இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இத்திட்டதிற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் அந்த எதிர்ப்புக்களை சமாளிக்க மத்திய அரசு ஒரு புதிய வியூகத்தையும் வகுத்துள்ளதாம்.இந்தியாவில் எவர் ஒருவர் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவருக்கான ரேஷன் பொருட்களை அவர் பெற்றுக் கொள்ளும் வகையில் தான் ஒரே இந்தியா  ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

திட்டம் என்ன சொல்கிறது:

இந்த திட்டத்தின்படி எவர் ஒருவரும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளார் எனில் அவர் மற்றொரு மாநிலத்திலும் இந்த ரேஷன் அட்டையை கொண்டு தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும்  பணி நிமித்தமாக ஒரு மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்வோருக்கும் இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் கிடைக்கின்ற வகையிலும் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றும் வகையிலும்  இந்த திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.

Related image

இந்நிலையில் ரேஷன் பொருட்கள் எல்லாம் ‘பாயின்ட் ஆப் சேல்’ என்கின்ற  கருவி கொண்டு ஆதார் உறுதி பார்த்தல் அல்லது கைரேகை பதிவின் மூலம் இந்தியாவில் எப்பகுதியிலும் இருந்து பொருட்கள் வாங்கும் வசதி கிடைக்கும்.உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்:அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் ஆகியவை 1 கிலோ- 1 ரூபாய் முதல்- 3 ரூபாய் வரை வழங்கப்படும். நாடு முழுவதும் 79 கோடி ரேஷன் கார்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் 3.5 கோடி பேர் பயன் அடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது ஆக மத்திய அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

Image result for ரேசன்

அதன் படி முதற்கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா, குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா,  மத்தியப் பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில் இது ஜன.,15ல் அறிமுகம் செய்யப்பட்டு அமல்படுத்தபட உள்ளது. இதைத் தொடர்ந்து  அனைத்து மாநிலங்களுக்கும் படிப்படியாக  விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்