அடுத்தாண்டு தேர்தலுக்கு..! இந்த ஆண்டே தயாராகும் தெலுங்கானா..!!ஆர் யூ ரெடி..! ஐயம் ரெடி..முதல்வர்சந்தரசேகர் ராவ்..!!
தெலங்கானா மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் குறித்து மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
தெலுங்கனா :பல வருட போராட்டங்களுக்குப் பின் ஒன்றாக இருந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 2014- ஜூன் மாதம் 2-ம் தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா மாநிலம் உருவானது. அப்போது நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானவிற்கு அடுத்த ஆண்டு மே மாதம் , சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் இரண்டும் நடக்கவுள்ளது. இந்நிலையில், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த ஆண்டு டிசம்பரில் 4 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனோடு தெலங்கானா மாநிலத்துக்கும் சேர்த்து 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
மேலும் தற்போது அவர் அறிவித்த திட்டங்களால் தெலுங்கானவில் சாதகமாக சூழ்நிலை நிலவுவதால் இந்த ஆண்டே தேர்தல் நடத்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
DINASUVADU