அசராமல் பதில் கூறிய அமித் ஷா!பாஜகவிற்கு அடுத்த தேர்தலில் அதிக இடங்கள்….
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உ.பி., பீகார் இடைத்தேர்தலில் பா.ஜ க., தோல்வி அடைந்த பிறகு முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,தேர்தல் வர இன்னும் அதிக நாட்கள் உள்ளன. ஆனால் உறுதியாக சொல்கிறேன், 2014 தேர்தலில் பெற்றதை விட தேசிய ஜனநாயக கூட்டணியும், பா.ஜ.கவும் மிக அதிகமான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வருவோம். இடைத்தேர்தல் தோல்விக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை உ.பி.,யும் பிற பகுதிகளும் ஒன்று தான். எத்தனை கட்சிகள் கூட்டணி வைத்து எதிர்த்து போட்டியிட்டாலும் அந்த சவாலை சமாளிப்பதற்கும், தயாராவதற்கும் போதிய அவகாசம் உள்ளது. ராகுலால் அரசியலில் மாற்றம் கொண்டு வர முடியும் என நான் நம்பவில்லை.இவ்வாறு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.