அசத்தும் காங்கிரஸ்…அதிச்சியில் பிஜேபி….நவ 9 நாடு தழுவிய போராட்டம்…!!

Default Image
ரூபாய் நோட்டு விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் 9-ம் தேதி, காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி ரூ. 500, 1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார்.இதையடுத்து மக்கள் பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை பெற்றுக் கொண்டனர். ரூ.1000 நோட்டு இன்னும் வெளியிடப்படவில்லை.
இதன் 2-வது ஆண்டை குறிக்கும் வகையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி, புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
ரூபாய் நோட்டு விவகாரத்தில், இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீர்குலைத்து விட்டார்.   கருப்பு பணம் ஒழிப்பு – பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுத்தல் – கள்ள நோட்டுக்களை அழித்தல் ஆகிய 3 நோக்கங்களையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டினார்.மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் 9-ம் தேதி, காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றும். காங்கிரஸ் தொண்டர்கள் அந்த தினம் 11 முதல் 1 மணி வரை ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்