அஇஅதிமுகவின் முழக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை…!!
மேகேதாட்டுவில் தடுப்பணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசை கண்டித்து, மாநிலங்களவையில் அஇஅதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கத்தில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை இன்று கூடியதும், மத்திய அமைச்சர் மேனகா காந்தி உள்ளிட்டோர் தங்களது இலாக்கா சார்ந்த அறிக்கைகளை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அஇஅதிமுக சார்பில் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு, அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, விவாதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு சென்று, முழக்கங்களை எழுப்பினர்.