ஃபேஸ்புக் நிறுவனம் தீவிர ஆய்வு !கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஆய்வுப்பணி!
ஃபேஸ்புக் நிறுவனம்,கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தங்களது சமூக வலைதளத்தில் பகிரப்படும் பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் முறைகேடு செய்ததாகக் கூறி குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார். இந்திய அரசு எச்சரித்த நிலையில், இந்தியா உள்பட எங்கும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டோம் என ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் வரும் மே 12-ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தல் சார்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராய பூம் (Boom)எனும் சர்வதேச கண்காணிப்பு நிறுவனத்தை ஃபேஸ்புக் அணுகியுள்ளது. அதன்படி தவறானது என மதிப்பிடப்படும் ஃபேஸ்புக் பதிவு, அதிக முறை பார்வையாளர்களின் கண்ணில் படாதவாறு வடிகட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.