ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தேர்தல்களில் மோசடியில் ஈடுபடாமல் தடுக்க புதிய திட்டம்! எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்க அறிவுரை
நாடாளுமன்ற நிலைக்குழு,ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இந்தியத் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபடாது என்பதை எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா மூலம் இந்தியத் தேர்தல்களிலும் முறைகேட்டில் ஈடுபடக் கூடும் என்ற அச்சம் எழுந்ததையடுத்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ஃபேஸ்புக்கிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேர்தல்களில் மோசடியில் ஈடுபடாது என்பதை எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கிடுமாறு நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.