கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தினமணி ஆசிரியர் மன்னிப்பு கோரியதாகவும், கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஜீயர் தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக தினமணி ஆசிரியரும், சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறிய கவிஞர் வைரமுத்துவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அக்கோயிலின் ஜீயர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தினமணி ஆசிரியரும், கவிஞர் வைரமுத்துவும் நேரில் வந்து மன்னிப்புக் கேட்காவிட்டால், வரும் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்த தினமணி நாளிதழ் ஆசிரியர் வைத்தியநாதன், ஆண்டாள் முன்பு மன்னிப்பு கேட்டதாக ஜீயர் தெரிவித்தார். இதேபோல் கவிஞர் வைரமுத்து வந்து மன்னிப்பு கேட்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
கவிஞர் வைரமுத்து தினமணி நாளிதழில் தமிழை ஆண்டாள் என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஆண்டாள் பற்றிக் கூறிய சில கருத்துக்களால் சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்துக் கவிஞர் வைரமுத்தைக் கண்டித்துப் பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….