விருதுநகர் அருகே பட்டாசு உற்பத்தியாளர்கள் சாலை மறியல்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சாலை மறியல்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சிவகாசி பேருந்து நிலையம் முன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
source: dinasuvadu.com