விருதுநகர் மாவட்டம் அருகே சதுரகிரி மலை மிக சிறப்பு பெற்றது இந்த நிலையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதிகளில் மழை பெய்து வரும் சூழ்நிலையில் சதுரகிரி மலைக்கு செல்ல பக்த்ர்களுக்கு வனத்துறை அனுமதி மறுக்கபட்டது இதனை தொடர்ந்து பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் சுந்தர மகாலிங்க கோவிலில் 3 நாட்கள் தாங்கி வழிபட்டு வருவது வழக்கம் சதுரகிரி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது இதனால் சங்கிலி பாறை,மற்றும் மாங்கனி ஓடைகளில் மழை வெள்ளம் அதிகமாக இருந்த […]
அருப்புக்கோட்டை நகர் கட்டகஞ்சம்பட்டி பகுதியை சார்ந்த மாரிச்சாமி,போதும்பொண்ணு தம்பதியர்களின் (குறவர் சமூக) குடும்பத்தை அருப்புக்கோட்டை காவல்துறை எந்த முகாந்திரமும் இன்றி இழிவு படுத்தியுள்ளது.வீடு புகுந்து அராஜகம் செய்துள்ளது.ஒரு வாரமாக இரவு 11 மணி வரை காவல்நிலைய வாசலில் நிற்க வைத்துள்ளது.மீன் வாங்கி விற்கும் சுயமரியாதை உள்ள அந்த குடும்பத்திற்கு நீதி கேட்டும்,காவல் ஆய்வாளர் திரு அன்னராஜா மீது நடவடிக்கை கோரியும் அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள வடக்கு ரதவீதியில் செயல்படுகிற ஆட்டோ நிறுத்த தலைவர் சீனிவாசன் என்பவர் சில சமூக விரோதிகளின் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். மேலும் இவர் புதிய தமிழகம் கட்சியை சார்ந்தவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் சாமுவேல் ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசனை சந்தித்தார்கள். ஆட்டோ நிறுத்தம் இங்கே செயல்படக்கூடாது என நகைக்கடை […]
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தினமணி ஆசிரியர் மன்னிப்பு கோரியதாகவும், கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஜீயர் தெரிவித்துள்ளார். ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக தினமணி ஆசிரியரும், சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறிய கவிஞர் வைரமுத்துவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அக்கோயிலின் ஜீயர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தினமணி ஆசிரியரும், கவிஞர் வைரமுத்துவும் நேரில் வந்து மன்னிப்புக் கேட்காவிட்டால், வரும் பிப்ரவரி 3ஆம் தேதி […]
சிவகாசியில் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தபோது மேடையின் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்கினர் . பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும், பட்டாசு தொழிலில் உள்ள சிக்கல்களை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் வளைவு முன்பு, தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் […]
சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 19வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவரது உருவப்படத்தை எரித்து 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக புகார் எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பபட்டுள்ளது. இந்நிலையில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் […]
விருதுநகர் அருகே தனியார் பேருந்தும் டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 5பேர் பலி என தகவல் . விளாத்திகுளத்தில் இருந்து விருதநகர் சென்ற தனியார் பேருந்து விருதுநகர் அருகே சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மீதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 5 பேர் சம்பா இடத்திலே பலியாகினர். மேலும் 20 க்கும் மேற்பட்டவர்கள் காயம் என தகவல்.காயமடைந்தவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர் .இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சொகத்தை […]
விருதுநகர்: சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள்,தொழிலாளர்கள் 11 ஆம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசு சுற்றுப்புறச் சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சாலை மறியல். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சிவகாசி பேருந்து நிலையம் முன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. source: www.dinasuvadu.com
சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 900-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு தொழில் மற்றும் அதன் சார்பு தொழிலை நம்பி சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த மசோதாவில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு கோரியும், பட்டாசு தொழிற்சாலை சங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. மேலும், பட்டாசுக்கு தடைக் கோரி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் […]
சிவகாசி அருகே மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்க அரசுப்பேருந்தில் செல்கிறார் விருதுநகர் ஆட்சியர் கல்லமநாயக்கன்பட்டி முகாமில் பங்கேற்க துறைசார் அதிகாரிகளுடன் ஆட்சியர் சிவஞானம் பயணம்.
பள்ளி மாணவர்களுக்குள் இருக்கையில் அமர்வது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு, அடிதடியாகி போலிஸ் வரை சென்றுள்ளது. அருப்புகோட்டை அருகே குலசேகரநல்லூர் செல்ல இரண்டு 17 வயது மாணவர்கள் நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் அந்த பேருந்தின் டிரைவர் இருக்கை பின் புறம் அமர்ந்தனர். அதே பேருந்தில் வரும் பச்சேரி மாணவர்களுக்கும் இடையே இருக்கை தொடர்பாக பிரச்சனை வந்துள்ளது. இது அடிதடி வரை சென்று குலசேகரநல்லூர் மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அருப்புகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து […]