ராஜபாளையத்தில் வீட்டில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட யானை நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு காணிக்கையாகச் செலுத்துவதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு பெண் யானையை விலைக்கு வாங்கி வந்துள்ளார். அப்போது கர்நாடக வனத்துறையினர் இந்த யானையை விற்கவோ பிற பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என்று உத்தரவு கடிதத்தை கொடுத்துள்ளனர். இந்நிலையில் யானையை பராமரிக்க முடியவில்லை என்பதால் அதே பகுதியைச் சேர்ந்த முகமதுயூசூப் […]
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் ஆத்திரமடைந்த நபர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து சக நண்பரை அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த அச்சம் தவிழ்த்தான் கிராமத்தில் வசித்து வந்த சுந்தரமூர்த்தியும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஈஸ்வரனும் நண்பர்களாக இருந்தனர். தண்ணீர் பிடிப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஈஸ்வரன் தனது கூட்டாளிகள் இரண்டு பேருடன் சேர்ந்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சுந்தரமூர்த்தியை சரமாரியாக அரிவாளால் […]
விருதுநகர் சாத்தூர் அருகே வைப்பாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையபட்டி பகுதி வைப்பாற்றில் அனுமதியின்றி அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அனுமதியின்றி மணல் அள்ளிய 2 லாரி, 2 டிப்பர் மற்றும் ஜேசிபி வண்டிய பறிமுதல் செய்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட வேல்முருகன், அய்யனார், திருப்பதி ஆகிய 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை […]
விருதுநகர் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக் காதலன் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சத்ரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு தர்ஷினி, ரூபாஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், முத்துலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ராஜாவுக்கு தெரியவந்ததும், மனைவியைக் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த […]
தொடர் மழை காரணமாக விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் கரையை கடந்த நிலையில் அதிதீவிர புயலாக பலத்த சூறைக்காற்றுடன் வீசி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் புயல் கடுமையாக வீசி வருவதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் புயல் காரணமாக தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மக்களை […]
பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டது.இதனால் பட்டாசு விற்பனை இந்தாண்டு தீபாவளிக்கு படுமந்தமாகவே இருந்தது.மேலும் இதனால் சிவகாசி உற்பத்தியாளர்கள் மற்றும் அதில் கூலிக்கு வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசியை சார்ந்த சுற்றுவட்டாரப் பகுதி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.நடைபெற்ற கூட்டத்தில் வெடிகள் உற்பத்திக்கு பேரியம் […]
சாத்தூர் அருகே உள்ள மூலிகை குடோனில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. மேட்ட மலையில் ,தனியார் மூலிகை ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது .இந்நிலையில் இந்த மூலிகை ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது .இந்த தீ விபத்தில், ரூ.2 கோடி மதிப்புள்ள மூலிகை பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
சபரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.இங்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவது வழக்கம்.இந்நிலையில் அங்கு கடுமையான மழை பெய்தால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது.நாளை பிரதோஷத்தை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம் இந்நிலையில் தான் மழை காரணமாக வனத்துறை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது […]
ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சைவ (ம)வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்தது.இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள் வெகுவாக சிறப்பாக நடைபெறும்.இந்த விழா நாட்களில் சுவாமி,அம்பாள் காலை இரவு என பல்வேறு வாகனங்களில் வீதி உலா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஜப்பசி திருவிழா நேற்று காலை ஸ்ரீகோமதி […]
விருதுநகர் அருகே இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தொப்பளாக்கரை கிராமத்தில் கோயில் யாருக்கு சொந்தம் என்று வாக்குவாதம் தொடங்கியது .பின்னர் ஒரு தரப்பு கோவிலுக்கு பூட்டு போட செல்லும்போது மற்றொரு தரப்பு அவர்கள் மீது கற்களை கொண்டு தாக்குதலை தொடர்ந்தனர்.பின்னர் இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதல் வலுவடைந்தது .இந்த மோதலால் அங்கிருந்த வாகனங்கள் மீது தீவைக்கப்பட்டது.மேலும் மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி…. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் காக்கிவாடன்பட்டி என்ற கிராமத்திற்க்கு அருகே செயல்பட்டுவந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிமருந்து உராய்வு காரணமாக திடீர் என தீ பற்றியது. இதையடுத்து, விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இவ்விபத்தில் காயமடைந்த இருவரை […]
விருதுநகர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை உயர் தொழில்நுட்ப வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. குப்பாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 130 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் தொடுதிரை வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு புதுமை பள்ளிக்கான விருதுடன் வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் பரிசு தொகை, ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்பு 70 ஆயிரம் […]
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது மணல்லாரி மோதியதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் பனையூரைச் சேர்ந்தவர் பாண்டி மகன் கணேசன் (28). முத்துராமலிங்காபுரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உடையான் மகன் முருகன் (25). இவர்கள், ஆவியூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தனர். இந்நிலையில், வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக கணேசன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் முருகன் பின்னால் அமர்ந்து பயணம் […]
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்திக்குள்ளானதில் டிஎஸ்பி லட்சுமணன் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆட்டோ மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் காரை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. DINASUVADU
விருதுநகர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் தொடங்கியது தேரோட்டத்தை எம்.எல்.ஏ சந்திர பிரபா, ஆட்சியர் சிவஞானம் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.மக்கள் எராளமனோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். DINASUVADU
விருதுநகர் அருகே உள்ள கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். விருதுநகர் அருகே சிவலிங்காபுரத்தில் பள்ளிக்கு உள்ள கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும் வைகோ என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
விருதுநகர் அருகே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.காவல்துறை மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரில் தலைமை ஆசிரியர் முருகேசனை கைது செய்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட போலி சாமியார் மீது அடுக்கடுக்கான அதிர்ச்சிகர புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. செழிப்பாக வாழ்ந்த பலபேரை கடனாளியாக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்ட பலே சாமியாரின் மோசடிகளை விவரிக்கிறது இந்த செய்தி மெல்லிய தேகம், ஒன்றும் தெரியாத அப்பாவி முதியவர் போன்ற தோற்றம் கொண்ட இந்த நபர்தான், பலரது வாழ்க்கையில் விளையாடிய போலிச்சாமியார் சின்னத்துரை. மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் ஊருக்கு […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே, கோயில் திருவிழாவினை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பில் தொடங்கியுள்ள ஜல்லிக்கட்டில், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 350 காளைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 200 மாடுபிடி வீரர்களும் களத்தில் உள்ளனர். வாடிவாசல் வழியே சீறிப்பாயும் காளைகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு பீரோ, கட்டில், தங்கக் காசுகள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட உள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்