கொரோனோ வைரஸ் தொற்று உலகம் முழுவது மின்னல் வேகத்தில் பரவி தனது கோரத்தை அரங்கேற்றி வருகிறது.இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர் அப்பாவி மக்கள் உயிரிழந்து உள்ளனர். உலகமே கொரோனாவை கண்டு கடும் அச்சத்தில் உள்ளது.இந்தியாவில் இதன் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது கவலை அளிக்கிறது.இதன் மின்னல் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது.ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் ஒன்றுக்கூடும் வழிபாடுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால் முறைப்படி […]
மக்கள் நலன் கருதி பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊர்க்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் இதனை சரியாக கடைபிடித்தால், கொரோனா வைரஸை முற்றிலும் விரட்டியடிக்கலாம் என கூறியிருந்தார். இந்நிலையில், மக்கள் பலரும் இந்த நடவடிக்கையை கடைபிடிக்காமல், வெளியில் நடமாடி வருகின்றனர். இதனையடுத்து, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய மக்கள் மீது, போலீசார் தண்ணீர் பீச்சி அடித்து விரட்டியடித்துள்ளனர்.
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழி நடத்திய வழக்கு தொடர்பாக, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலா தேவி உட்பட 3 பேர் இன்று ஆஜராகினர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கூர் தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி கடந்த வருடம் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய […]
விருதுநகரில் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டம் ஆகி 3 பேர் உயிரிழந்த சமானம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சட்டத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சூர்யா பிரபா என்ற பட்டாசு ஆலையில் அப்பகுதியே சேர்ந்த ஏராளமான தொழிலார்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று(புதன்கிழமை) காலை வழக்கம்போல் தொழிலார்கள் ஆலைக்கு சென்ற நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டம் ஆகிய […]
பள்ளி முடிந்தவுடன் அப்பாவை காண செல்லாத சிறுமி.எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த தந்தை. பாலியல் வன்புணர்வின் காரணமாக மரணமா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் ஆவார்.இவர் ஒரு கட்டிட தொழிலாளி ஆவார்.இவரது மகள் அப்பகுதியில் உள்ள சித்துராஜபுரம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளி முடிந்தவுடன் அப்பா வேலை செய்யும் இடத்திற்கு சென்று விடுவார்.பின்னர் சுந்தரம் தான் அவரை வீட்டிற்கு அழைத்து […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் டிச.,27 மற்றும் டிச.,30 இருகட்டங்களாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் நலத்திட்டங்கள் எதுவும் கிடையாது என்று சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மக்களிடையே காட்டம். தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற் பாடுகளில் தேர்தல் ஆனையம் முனைப்பு காட்டி வரும் நிலையில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்கான பிரச்சாரமும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன்(அதிமுக) சாத்தூர் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து கொட்டி தீர்த்தது. வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரும்பாலான மாவட்டங்களில் அதாவது 17 மாவட்டங்களில் கனமழைப் பதிவாகி உள்ளது. 3 மாவட்டங்களில் மிக கனமழைப் பதிவாகி உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு இன்றைக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலை தெரிவித்துள்ளது. கடந்த […]
கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் அழைத்து சென்றதாக கூறி பேராசிரியர் நிர்மலா தேவி மீது கூட்டு சதி உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.மேலும் முருகன் , கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில் விசாரணைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது முருகன் , கருப்பசாமி, ஆஜரானார்கள். ஆனால் […]
விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் 8 பேர் மது அருந்திவிட்டு, வகுப்பறைக்குள் சென்றதாகவும், அப்படியே கம்ப்யூட்டர் லேப் வகுப்புக்கும் சென்றதாக குற்றம் சாட்டி கல்லூரி நிர்வாகம் இவர்களை மூன்றாம் ஆண்டு படிக்க அனுமதிக்க மறுத்தது. இதனால், அந்த 8 மாணவர்களும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘ கல்லூரி நிர்வாகமானது, எங்களிடம் மூன்றாம் ஆண்டுக்கான கட்டணத்தை வாங்கி கொண்டு எங்களை சேர்க்க மறுப்பதாக, அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் அமாவாசை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் ஆடி மாதம் அமாவாசை திருவிழா நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலுக்கு கடந்த 27-ம் தேதி முதல் இன்று வரை செல்ல அனுமதி கொடுக்கப்பட்டு இருத்தது. நேற்று நடந்த ஆடி மாதம் அமாவாசை திருவிழாவில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்ட […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி இந்திரா காலனியில் இருந்த ஒரு வீட்டில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டது.உடனடியாக அருகில் இருந்த பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். இதை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் வெடி சத்தம் கேட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.அந்த சோதனையில் தங்கேஸ்வரன் என்ற வாலிபர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரிய வந்தது. தங்கேஸ்வரன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது எதிர்பாராத விதமாக ஒரு நாட்டு […]
மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், தேர்தலை முன்னிட்டு பல விதிமுறைகளையும் விதித்துள்ளது. இந்நிலையில், அனைத்து இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சோதனையில், பல கோடிகள் சிக்கியுள்ளது. இதனையடுத்து, இடைத்தேர்தல் நடைபெறும் சாத்தூர் தொகுதியில் எதிர்கோட்டை எனும் இடத்தில் உள்ள அமமுக தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், […]
விருதுநகரில் வரும் ஜனவரி 17ம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். சிலைத் திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிர்வாக சங்கம் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனர் போஸ், வரும் ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆருக்கு திருவுருவ சிலை திறக்கப்படும் […]
பின்தங்கிய மாவட்டங்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்டதில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 111 மாவட்டங்கள் இடம் பெற்ற இந்த பட்டியலில் விருதுநகர் மாவட்டத்திற்கு தான் முதல் இடம். இந்தியாவில் கல்வி, விவசாயம், நீர் நிலைகள், ஆரோக்கியம், நிதி சேர்த்தல், திறன் வளர்ச்சி, அடிப்படை உள்கட்டமைப்பு போன்ற எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் மாவட்டங்களின் பட்டியலை ‘நிதி ஆயோக்’ வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்து சாதனை […]
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய சாத்தூர் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை ஊழியர்கள் செலுத்தினார்கள். கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்டக்குழு அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய சாத்தூர் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள் மீது சாத்தூர் […]
கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை ஊழியர்கள் செலுத்தினார்கள். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது […]
கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்டக்குழு அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை ஊழியர்கள் செலுத்தினார்கள். ரத்தம் செலுத்திய விவகாரத்தில் ரத்தவங்கி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்டக்குழு அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை ராஜாஜி மருததுவமனையின் ரத்த வங்கி தலைவர் டாக்டர் சிந்தா தலைமையில் குழு […]
கர்ப்பிணியின் கணவருக்கு அரசு சார்ப்பில் ஓட்டுநர் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை ஊழியர் செலுத்திய விவகாரம் தொடர்பாக நோயாளிகளுக்கு ரத்த வங்கியில் இருந்து ரத்தம் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஹெச்ஐவி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை கூறியது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் […]
பட்டாசு உள்ளிட்ட தொழில்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மத்திய அரசை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். பட்டாசு, பஞ்சாலை, விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட தொழில்களை மத்திய அரசு நெருக்கடிக்குள் தள்ளியிருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். ராமகிருஷ்ணாபுரத்தில் துவங்கிய பேரணி ராஜபாளையம், வெம்பக்கோட்டை வழியாக சிவகாசியை சென்றடைந்தது. பேரணியின்போது மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.