விருதுநகர்:சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் மஞ்சள்சோலை ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.மேலும்,வேலை செய்து கொண்டிருந்த 5 பேர் ஆலையில் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்த தகவல் அறிந்து,தீயை அணைப்பதற்காக சாத்தூர்,வெம்பக் கோட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.இதனைத்தொடர்ந்து,ஆலையில் சிக்கிய 5 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு,சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,ஆலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் […]
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சிவகாசி அருகே புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசுகள் வெடித்து இரண்டு அறைகள் தரைமட்டமான நிலையில் தீயணைக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் இந்த கோர விபத்து […]
விருதுநகர்:பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின்கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து,முன்ஜாமீன் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால்,அவரை […]
நாளை முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி விருதுநகர் மாவட்டத்திலுள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. அதே நேரத்தில் நீரோடைகளில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2021-2022 பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்(PMMSY)” கீழ் மானியம் வழங்கப்படவுள்ளது என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-22-ம் ஆண்டு பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (PMMSY) விருதுநகர் மாவட்டத்தில் திட்டச் செயலாக்கத்தில், புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் (2 ஹெக்), பயோபிளாக் முறையில் மீன்வளர்ப்பு செய்தல் (1000 ச.மீ), நீரினை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி மீன்வளர்ப்புச் செய்தல் (100 m3), […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அனுமதி இல்லாமல் பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டடம் தரைமட்டம். சிவகாசி அருகே நேருஜி நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக குழாய் கம்பெனியில் பதுக்கி வைத்திருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளது. இந்த சம்பவம் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிக்கு விரைந்துள்ளனர். இந்த கம்பெனியில் 6 பேர் பணிபுரிந்த நிலையில், வெடிவிபத்தில் படுகாயமடைந்த இருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 12 வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆடிப்பெருக்கையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆடி பெருக்குக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது. குறிப்பாக விருதுநகர் […]
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகேயுள்ள பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் எனும் கிராமத்தில் இயங்கி வரக்கூடிய மாரியம்மாள் எனும் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையின் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் […]
ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலை கோவில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதிலும் வழிபாட்டு ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது தான் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகளுடன் சில இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் கூட்டமாக செல்லக்கூடிய இடங்களுக்கு இன்னும் முழுவதுமாக அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தருமபுரி மாவட்டம் அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது.அதே போல சேலம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெரும் எனவும், மு.க ஸ்டாலின் தான் முதல்வராவார் எனவும் இந்திய கமியூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் எனுமிடத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் உயிலுமுத்து அவர்களின் படத்திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் அவர்கள் நிகழ்ச்சியில் பேசிய போது, அவர் கொள்கை சார்ந்த கூட்டணி தான் […]
விருது நகர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள குந்தலப்பட்டி எனும் இடத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வழக்கம் போல் இன்று காலை பட்டாசு தயாரிக்க கூடிய பணி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலையில் மருந்து கலக்கும் அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார் எனும் 55 […]
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று லட்சத்திற்கும் அதிக மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து நாசமாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகே வள்ளி மில் எனும் பகுதியில் கோவில்பட்டியை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை ஒன்று உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த கடை கடந்த மூன்று மாதங்கள் திறக்கப்படாமல் அடைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக உள்ளேயிருந்து பட்டாசுகள் வெடித்துள்ளது. சிறிது நேரத்தில் கடை […]
விருதுநகரில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை ஆரம்பித்துள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த படி தான் உள்ளது. இந்நிலையில் இதற்கான மருந்துகளையோ அல்லது தடுப்பூசிகளையோ இன்னும் கண்டுபிடிக்க படாத நிலையில் பல இடங்களில் சித்த மருத்துவம் மூலமாக குணமாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளனர். 154 படுக்கை வசதிகளுடன் கூடிய அறைகள் உள்ளது. நேற்று ஒரே […]
விருதுநகர் மாவட்டத்தில் சீருடை மற்றும் வாக்கிடாக்கியுடன் டாஸ்மாக் கடையில், மது அருந்திய சிறப்பு எஸ்ஐ கோடீஸ்வரன் பணி நீக்கம். விருதுநகர் மாவட்டத்தில் ஆமத்தூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஆமத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ ஆக பணியாற்றும் கோடீஸ்வரன் என்பவர் சீருடை அணிந்தவாரே மது அருந்தியுள்ளார். இவர் நேற்று பணியில் இருந்தபோது சிவகாசி சாலையில் மத்திய சிறை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று சீருடையில் இருந்ததோடு வாக்கி டாக்கியை கையில் வைத்துக் கொண்டு […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 2 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தில் சென்னை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் நலன் கருதி சில தளர்வுகளை அரசு கொடுத்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் […]
நடிகர் விஜயின் தெறி படத்தில் வெளியான, ஜித்து ஜில்லாடி பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றிய காவல்துறையினர். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், விருதுநகரை சேர்ந்த தலைமை காவலர் ரமேஷ் நம்பி ராஜன் மற்றும் பயிற்சி காவலர்கள் […]
ஊரடங்கை மீறியதாக சிவகாசி அருகே 2 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி இரண்டு பட்டாசு ஆலைகள் இயங்கியதாக கூறி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சார்-ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.
பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று விருதுநகர் ஆட்சியர் கண்ணன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பின்னர் ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் 20-ஆம் தேதிக்கு கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் ஆட்சியர் கண்ணன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு 50% […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. கோடைவெயில் வாட்டி வந்த நிலையில் மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பொழிந்தது.இதில் மதுரையில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. அதே போல் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.மேலும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழை அதிகாலை முதல் பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது