பட்டாசு ஆலை வெடிவிபத்தில் அரவிந்த் என்பவர் இறந்த நிலையில், ஆலையின் மேலாளர் ராஜேந்திரன் கைது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை தரைமட்டமாகிய நிலையில், மாதன்கோவில்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த அரவிந்த் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் […]
ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் அறிவிப்பு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை தரைமட்டமாகிய நிலையில், ஒருவர் பலியானார். இந்த நிலையில், சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த அரவிந்த் (32) என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை தரைமட்டமாகிய நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
கட்டட வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 4 பேர் உயிரிழப்பு. விருதுநகர் கருப்புசாமி நகரில் மின்னல் தாக்கி கட்டட தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருப்புசாமி நகரில் கட்டட வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஜெயசூரியா, கார்த்திக் ராஜா, முருகன், ஜக்கம்மா ஆகியோரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர்:பட்டியலின இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நான்கு சிறார்களுக்கு ஜாமீன். விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். அதன்பின்னர்,இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிஹரன்,ஜூனைத், மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி […]
விருதுநகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3வது நாள் சிபிசிஐடி விசாரணை. விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிஹரன், ஜூனைத்திடம் சிபிசிஐடி போலீசார் 3வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். வன்கொடுமை நடந்த மருந்து குடோனுக்கு அழைத்து சென்று ஹரிஹரன், ஜூனைத்திடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த விசாரணையில், போதை மாத்திரை, போதை ஊசிகளை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. முன்னதாக […]
விருதுநகரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் கைதானவர்களில் 4 பேரின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்து மிரட்டி வந்துள்ளார். ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரது நண்பர்கள் அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், ஹரிஹரன் […]
விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நிறைவு பெற்றது. விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுமார் 6 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. சமூக நலத்துறை அலுவலகத்தில் இளம்பெண்ணிடம் எஸ்பி முத்தரசி, டிஎஸ்பி வினோதினி நேரில் விசாரணை நடத்தினர். வன்கொடுமை சம்பவம் குறித்து, வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இளம்பெண் பலாத்கார வழக்கு ஆவணங்கள் நேற்று சிபிசிஐடி வசம் […]
விருதுநகரில் 22 வயது பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பள்ளி சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரிஹரன் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஹரிஹரன் அந்த இளம்பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டதை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை ஹரிஹரன் தன் நண்பர்கள் 3 பேருக்கு காட்டி உள்ளார். ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேல ஒட்டம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து கணேசன் என்பவர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. பரமன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. பட்டாசு ஆலை ஊழியர் ராமர் படுகாயம் அடைந்த நிலையில் தீயைக்கட்டுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் கோட்டூர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. குமார் என்பவருக்கு சொந்தமான செந்தூர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பிரான்சி ரக பட்டாசு தயாரித்து கொண்டியிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடி மருந்தில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெடி விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் தொடர்ந்து வெடி […]
விருதுநகர் 28-வது வார்டில் குடிநீர் பிரச்னை உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். விருதுநகர் 28-வது வார்டில் டி.சி.கே பெரியசாமி தெரு, சோனை கருப்பன் தெரு, வாடியான் தெரு, சின்னையாபள்ளிக்கூட தெரு, பெரிய காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் நீர் வசதி இல்லாததால் பக்கத்து தெருக்களுக்கு செல்கின்றனர். சாக்கடைகள் குறுகலாகவும், ஆழப்படுத்தாமலும் உள்ளது. இப்பகுதி மக்களுக்கு நுாலகம், சிறுவர் பூங்கா தேவையாக உள்ளது. பாதாளசாக்கடை தொட்டி மூடிகள் தரமின்றி உள்ளதால் உடைக்கின்றன. சாக்கடையை […]
சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ், இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட்டு யார் கட்சி மாறினாலும், அவர்களை வீடு புகுந்து வெட்டுவேன் என தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் பிப்.19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஒவ்வொரு கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், விருதுநகர் கிழக்குமாவட்ட அதிமுக சார்பில், சாத்தூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ், இரட்டை இலையில் போட்டியிட்டு […]
விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சர் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அறிவித்தார். விருதுநகர் அருகே நாட்டார் மங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு, மீதம் உள்ள கழிவுகளை எரிக்கும் பணியில் ஆறுமுகம், தெய்வேந்திரன் குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் மருத்துவமனையில் […]
விருதுநகர்:விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர்,பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர […]
விருதுநகர்:அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணியின்போது,கம்பி அறுந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீது விழுந்தது. விருதுநகர் மாவட்டம்,அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில்,சென்னையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தொட்டியங்குளம் பகுதிக்கு வந்த நேரத்தில்,அந்த பகுதியில் தாழ்வாக இருந்த மின் இணைப்பு கம்பி அறுந்து ரயில் மீது விழுந்தது. உடனே ரயிலை இயக்கியவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் ரயில் தடம் புரல்வது தவிர்க்கப்பட்டது.குறிப்பாக,மின் இணைப்பு […]
விருதுநகர்:அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அதன்பின்னர் , பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரியை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் […]
விருதுநகர்:அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டது.அதன்பின்னர்,பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரியை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார். இதனால்,ராஜேந்திர பாலாஜியை பல்வேறு பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர்.சுமார் 20 நாட்களாக […]
விருதுநகர் – சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரப்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மஞ்சள் ஓடைப்பட்டி விபத்தில் ஆலை உரிமையாளர் கருப்புசாமி, செந்தில்குமார் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெடிவிபத்தில் காயமடைந்த 4 தொழிலாளர்களுக்கு சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, சிவகாசி களத்தூரில் […]
விருதுநகர்:சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில்,விருதுநகர் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் மஞ்சள்ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.இன்று காலை பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 5 பேர் வெடிவிபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்த […]