அனுமதி இல்லை.! விருதுநகர் பாஜக அலுவலகத்தில் இருந்து பாரத மாதா சிலை அகற்றம்..
ஒரு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சாலை சந்திப்பு அருகே பாஜக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஐந்தடி உயரத்தில் பாரதமாதா சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலையை நேற்று நள்ளிரவு காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறையினர் அகற்றி உள்ளனர்
அலுவலகம் முன்பு பாரதமாதா சிலை வைப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது.இதன் காரணமாக பாஜகவினர் வைத்திருந்த பாரத மாதா சிலை அகற்றப்பட்டு வருவாய் துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை ராமேஸ்வரம், புதுக்கோட்டை சிவகங்கை , மதுரையை தொடர்ந்து அடுத்ததாக விருதுநகர் மாவட்டத்திற்கு வர உள்ளனர். இந்த சமயத்தில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.