விருதுநகர் மாவட்டம் பனையூரைச் சேர்ந்தவர் பாண்டி மகன் கணேசன் (28). முத்துராமலிங்காபுரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உடையான் மகன் முருகன் (25). இவர்கள், ஆவியூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தனர். இந்நிலையில், வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக கணேசன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் முருகன் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். சம்பவத்தன்று காரியாபட்டி- திருச்சுழி சாலையில் தனியார் தொண்டு நிறுவன அலுவலகம் அருகே வந்து கொண்டு இருந்த போது இரு சக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த மணல் லாரி பலத்த சத்தத்துடன் மோதியது.இதில் கணேசனும், முருகனும் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து உடனே 108 ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டது.உடனே சம்பவ இடத்துக்கு திருச்சுழி போலீஸார் வந்து இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநர் மல்லாங்கிணறை சேர்ந்த மாரியப்பன் மகன் கணேசன் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்…
DINASUVADU