சிவகாசியில் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தபோது மேடையின் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்கினர் .
பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும், பட்டாசு தொழிலில் உள்ள சிக்கல்களை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் வளைவு முன்பு, தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென மேடையை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதனால் கட்சியினரிடையே திடீர் சலசலப்பு உண்டானது.
சிறுவர்கள் சிலர் விளையாட்டுத்தனமாக சிறிய அளவிலான கற்களை வீசி சென்றதாக தொண்டர்கள் கூறினர். இதை அடுத்து தொடர்ந்து பேசிய விஜயகாந்த், ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ……
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…