காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தை சூறையாடிய ஜாதிவெறி கும்பல்…!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா அத்தியூர் திருக்கை கிராமத்தில் தலித் இளைஞன் பிரபு பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூகத்தை சேர்ந்த சரண்யா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 .2.2018 அன்று இரவு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சுமார்200பேர் கொண்ட கும்பல் தலித் மக்களின் சுமார் 60 வீடுகளில் தாக்குதல் நடத்தி தலித் மக்களின் பொருட்களை நாசப்படுத்தி யுள்ளனர்.
கண்ணில் கண்டவர்களை எல்லாம் அடித்து உததைத் துள்ளனர். டிவி, கேஸ் அடுப்பு, பீரோ, கட்டில் உள்ளிட்ட பண்ட பாத்திரங் களை அடித்து நொறுக்கியுள்ளனர். தலித் குடும்பங்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புக்கு சேதாரம் ஏற்படுத்தியுள்ளனர்.
அவர்களது வாழ்வாதாரத்தைக் குறிவைத்து சூறையாடியுள்ளனர்.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “பாதிக்கப்பட்ட தலித் பகுதியினர் மீதே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலித் மக்கள் வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு கிராமத்தில் அமைதி ஏற்படுத்த வேண்டும். கொடூர ஆயுதங்களுடன் ஆள்திரட்டி தலித் மக்களின் வாழ்வாதாரத்தை பாழ்படுத்திய சாதிவெறி கொண்ட ஆதிக்க சக்திகள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளி களைக் கைது செய்ய வேண்டும். உடைமைகளை இழந்து தவிக் கும் தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் தலித் மக்களின் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
காவல் துறை சரியான நடவடிக்கை எடுக்க வில்லை 24.2.2018 இன்று தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் சி.பி.எம் மாவட்டசெயலாளர் என் சுப்ரமணியன் முன்னனி மாவட்ட செயலாளர் எ.சங்கரன் மாவட்ட தலைவர் முத்துகுமரன் மாதர்சங்க கீதா சி.பிஎம் வட்ட செயலாளர் கண்ணப்பன் மற்றும் மாணவர் சங்க பிரகாஷ், கிருஷ்ணராஜ் ,ராஜீவ்காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி சட்டபூர்வ மேற் கொண்டுள்ளனர்.