தமிழ்நாட்டில் அவ்வபோது அந்நிய குளிர்பானங்களுக்கு எதிர்ப்பு பெருகி வருகிறது. மக்கள் தற்போது ஆர்வமுடன் இயற்கை பானங்களை அதிகம் விரும்பி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இயற்கை குளிர்பானங்களான நுங்கு, பதநீர், கரும்புச்சாறு,பழச்சாறு போன்ற பானங்கள் மக்களிடையே அதிகமாக விரும்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் விழுப்புரத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது ‘தமிழகத்தில் ஆகஸ்ட் 15 முதல் அந்நிய குளிர்பான பொருட்களான பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும்’ என […]
தமிழகத்தில் தற்போது விளைநிலங்களில் ஏற்கனவே கெயில் நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்க்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இந்த நிறுவனம் ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சொந்தகாரர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆலை பல்வேறு மக்கள் போராட்டத்திற்க்கு பின் மூடு விழா கண்டது.அதற்கு மாற்றாக தற்போது அரசு இந்த அனுமதியை அளித்திருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.இந்த நிறுவனம் ஆய்வு நடத்துவதற்கு திமுக […]
விழுப்புரம் அருகே ஒரே பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் துணி துவைக்கும் போது கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கக்கன் கிராமத்தை சேர்ந்த மணிமொழி , பவதாரணி கௌசல்யா ஆகியோர் அங்கே உள்ள லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்துள்ளனர்.இன்று விடுமுறை நாள் என்பதால் 3 மாணவிகளும் கிணற்றில் துணி துவைக்க அவர்கள் சென்றனர். தூணிதுவைக்க சென்ற 3 பேரில் பவதாரணி கால் தவறி கிணற்றில் விழுந்து உள்ளார். அவரை காப்பாற்ற மணிமொழி , கவுசல்யாவும் முயற்சித்துள்ளனர். ஆனால் […]
கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 வட மாநில இளைஞர்_கள் மீட்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சரி செய்ய வடமாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்_கள் காலை 10 மணிக்கு இறங்கி சரி செய்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு 10_அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் வரவழைக்க பட்டு கழிவுநீர் தொட்டியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிக்கியவர்களை மீட்கும் பணியை அடுத்து 2 இளைஞர்களை தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக மீட்டனர்.மேலும் ஒருவரை சுமார் […]
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து களப்பணியில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும், விரைவில் அவர்களுக்கான பயிற்சி முகாம் நடத்தப்படும் என்றும் கூறினார். பின்னர் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இந்த […]
ஆன்லைனில் செல்போன் புக் செய்தவருக்கு, பழைய கைக்கடிகாரம் வந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் உள்ள பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருபவர் சவுரி ராஜன்.இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது.செல்போன் ஆர்டர் செய்ததில் சவுரி ராஜனுக்கு ஓர் பழைய கடிகாரம் , ஒரு சார்ஜர், ஓர் அடாப்டர் ஆகியவை வந்துள்ளது.செல்போன் ஆர்டர் செய்ததில் பழைய கடிகாரம் வந்துள்ளதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து உதைத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரம் அருகே தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்த இளவரசன் என்பவர் அதே தெருவில் உள்ள ஓம் பிரகாஷ் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது 2 குழந்தைகள் மட்டும் இருப்பதை தெரிந்த கொண்ட அந்த இளைஞர் இரண்டு குழந்தைகளையும் வீட்டின் பின் பக்கம் தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு […]
விழுப்புரத்தில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லும் புகாரைத் தொடர்ந்து திடீர் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், வாகனங்களை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்வதால், விபத்து ஏற்படுவதாக புகார்கள் எழுந்துவந்தன. இதைத் தொடர்ந்து இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்து பிரிவு பறக்கும் படையினர், 10-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர்.உரிமம் இன்றியும், முறையாக பராமரிக்கப்படாமலும் இயக்கிய […]
விழுப்புரத்தில் பெண் குழந்தையை 30 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு விற்க முயன்ற தாய் மற்றும் வாங்க வந்த தம்பதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விழுப்புரம் நேரு வீதியில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த, இந்திராணி என்ற பெண்ணிடம் ஒரு தம்பதி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை கண்ட போலீசார் அவர்களை விசாரித்த போது, கடந்த 31-ம் தேதி இந்திராணிக்கு பெண் குழந்தை பிறந்ததும், அதனை சகாதேவன், ஜோதிக்கு விற்பனை செய்ய இந்திராணி ஒப்புக் கொண்டதும் தெரியவந்தது. 30 ஆயிரம் […]
கனமழை எச்சரிக்கை…விழுப்புரம் மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். DINASUVADU
விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்ட்டுள்ளதாம். மேலும் 18 பேர் விழுப்புரம் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவினர் 2 நாட்களுக்கு டி.எஸ்.பி.தேவநாதன் தலைமையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் பணியில் ஈடுபடுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையும் மாநில சாலையும் இணையும் இடத்தில் இந்த ஆண்டில் எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளது என்பது குறித்த அறிக்கையை தர வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு அரசு ஆணையிட்டுள்ளதையடுத்து, நவ,2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலை துறைக்கும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் அருகே காதலியை சுட்டுக்கொன்று விட்டு, காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அடுத்த அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவியான சரஸ்வதியும், வேலூர் பெட்டாலியன் பிரிவில் காவலராக இருந்த கார்த்திக் வேலனும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சரஸ்வதியின் பிறந்த நாளை கொண்டாட கார்த்திக் வேலன் அன்னியூர் சென்றுள்ளார். நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி, கார்த்திக் வேலன் தாம் வைத்திருந்த துப்பாக்கியால், காதலி […]
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், செஞ்சி, வளத்தி, மேல்மலையனூர், நீளாம்மண்டி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் அங்கு தற்போது நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். DINASUVADU
விழுப்புரம்: ஆண்டுதோறும் ஜுன் 3-ம் நாள் தமிழ் செம்மொழி நாள் என அழைக்கப்படும் என்று விழுப்புரத்தில் நடைபெற்று வரும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக சார்பில் ஆண்டுதோறும் இளம் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்றும், கலைஞர் அறக்கட்டளை சார்பில் ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கட்சியின் நிறை, குறைகளை யார் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கூறலாம் என்று தெரிவித்த ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கு முடிவு […]
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்று குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என்று தெரியவந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழகுண்டூர் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி தனலட்சுமி என்ற பெண் தனது வீட்டிற்கு தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டார். அவருடன் சேர்த்து மூன்று குழந்தைகளும் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் வரதட்சனை கொடுமையால் நடந்த நிகழ்வு என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சியில் ரூ. 25 000 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கைது செய்யப்பட்டனர்.அதேபோல் மோட்டர் வாகன ஆய்வாளரின் உதவியாளர் செந்தில்குமாரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கைது செய்தனர். வாகனத் தகுதிச் சான்று பெற முத்துகுமாரிடம் ரூ. 25000 லஞ்சம் பெற்றபோது மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு மற்றும் ஆய்வாளரின் உதவியாளர் செந்தில்குமர் சிக்கினார்கள். இந்நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் விழுப்புரம் […]
விழுப்புரம் அருகே வீட்டில் தீப்பிடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழகொண்டூரில் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது .வீட்டில் தீப்பிடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வீட்டில் தீப்பிடித்ததில் தாய் தனலெட்சுமி, 9 மாத குழந்தை ருத்ரன், கமலேஸ்வரன்(7), விஷ்ணுப்ரியன்(4) ஆகியோர் உயிரிழந்தனர்.சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.