கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, ராணிப்பேட்டையில் மாவட்டத்தில் கனமழை காரணமாக நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு, காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு […]
மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால் இன்று 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பிஅய்க்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]
விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் சேகர் என்பவரின் மளிகை கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் சேகர் என்பவரின் மளிகை கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது மணிகண்டன், ஐயப்பன் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை வேர்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக கரூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது 4 தொழிலாளர்கள் விஷவாயுத் தாக்கி உயிரிழந்தது […]
விழுப்புரம் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், 2 தனிப்படைகள் அமைப்பு. விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பொறியியல் கல்லூரி என்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ரம்யா என்ற மாணவி இளங்கலை மருந்தகவியல் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த நிலையில் திடீரென்று கல்லூரி முதல் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். கல்லூரியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி […]
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் த.மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. […]
விழுப்புரம்:கொழுவாரியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொழுவாரி கிராமத்தில் ரூ.3 கோடியில் 100 வீடுகளுடன் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்று முன்னர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வீட்டுச் சாவியை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து,பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் சமத்துவபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டார். இதனிடையே,சமத்துவபுரத்தில் கலைஞர் பூங்கா,விளையாட்டு திடல் உள்ளிட்டவைகளை திறந்து வைத்த முதல்வர் வாலிபால் விளையாடினார்.தமிழகத்தில் […]
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். விழுப்புரத்தில் பெரியார் சிலை சேதம் அடைந்துள்ளது. கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை சுற்றி இருந்த இரும்பு கூண்டை உடைத்து பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதில் பெரியார் சிலையின் முகப் பகுதி சேதம் அடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விழுப்புரம் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 20 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 20 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவு பிறப்பித்தார்.
விழுப்புரம் அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து,இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. நேற்று விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்ற அரசு பேருந்தில் 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துநர் சிலம்பரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஓட்டுநராக இருந்த அன்புச் செல்வன் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால் மாணவிக்கு, நடத்துனர் பாலியல் […]
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெளி சதுப்பு நிலத்தை தமிழகத்தின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ‘கழுவேலி ஈரநிலத்தை’ தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் […]
விழுப்புரம்:நடப்பு ஆண்டு பட்டப் படிப்பில் சேர்ந்திருப்பவர்கள் 10 ஆம் வகுப்புக்குப் பிறகு பொதுத் தேர்வு எதையும் சந்திக்காதவர்கள்,எனவே இவர்களுக்கு ஒரு திட்டத்தை முதல்வர் வடிவைக்க வேண்டும் என்று எம்.பி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்க பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு “இல்லம் தேடி கல்வி” என்ற புதிய […]
மழையால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்காத நிலையில், இன்று திறக்கப்பட்டன. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக கடலூர், விழுப்புரத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் அம்மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகு தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை படிப்படியாக […]
விழுப்புரம்:சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி மீது பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பி சாட்சி விசாரணைக்காக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் என்பவர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன்,இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. […]
நிவர் புயல் காரணமாக வரவேற்பு பந்தலில் காற்றடித்து, கம்பம் சரிந்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சரவணனுக்கு முதல்வர் நிதி உதவியை அறிவித்துள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவர் புயல் ஏற்பட்டது. இதனால் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு இருந்தாலும் சில இடங்களில் எதிர்பாராத சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக சிலர் உயிரிழந்தனர். […]
விழுப்புரத்தில் பலாத்காரம் செய்து 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் தெருநாவலூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கொத்தனூர் எனும் கிராமத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்துள்ளனர், ஆனால் கிடைக்கவில்லை. இது போல 2014 ஆம் ஆண்டில் […]
ஊரடங்கு விதிகளை மீறியதாக பொன்முடி உட்பட 317 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வந்ததால் முதலில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.இதனிடையே நேற்று விழுப்புரத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக எம்எல்ஏ பொன்முடி தலைமையில் மாற்றுக் கட்சியினர் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்நிலையில் பொன்முடி உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது விழுப்புரம் […]
தினமும் மோகன் என்ற காவலர் தனது வீட்டிலிருந்து 20கி.மீ தொலைவிலுள்ள காவல்நிலையத்திற்கு 40கி.மீ தூரம் வரை பயணம் செய்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த இவர் மோகன். 32 வயதுடைய இவர் விழுப்புரத்தில் உள்ள கிளியனூர் காவல்நிலையத்தில் முதல்நிலை போலீஸாக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து 20கி.மீ தொலைவில் இருக்கும் காவல்நிலையத்திற்கு தினமும் சைக்கிளில் பயணம் செய்து தான் செல்வாராம். ஆம் மோகன் கடந்த 2 ஆண்டுகளாக […]
அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற 33.31 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதன்பிறகு நிகழ்ச்சியில் தடுப்பு பணிகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் உலகில் உள்ள வல்லரசு நாடுகளே கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரக் கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் நோய் […]