கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட.விவகாரம் ! விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவிலுக்கு அதிகாரிகள் சீல்.!

droupathi amman koil

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் உள்ளே பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பட்டியலின மக்கள் புகார் அளித்து இருந்தனர்.

மேலும், கோவில் உள்ளே செல்ல முயன்ற பட்டியலினத்தவர்களை மாற்று சமூகத்தினர் தாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து , மாவட்ட ஆட்சியர் பழனி இரு தரப்பு மக்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாத நிலையில் தற்போது விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்து உள்ளார். மேலும், இரு தரப்பினரினரும் வருவாய் கோட்டாட்சியர் முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்