சிவகாசி: அரசியலுக்கு வரத்துடிக்கும் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நாடி ஜோசியத்தை நம்பாமல்; மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அரசியலுக்கு வரவேண்டும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கிண்டலாக தெரிவித்துள்ளார் .
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் உதயகுமார் பேசினார் அப்போது அவர் கூறியது,
அரசியல் எனபது ஒரு மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பு ,மக்களுக்காக களத்தில் நிற்பது , சேவை செய்வது ,மக்களின் வாழ்வாதாரம் சம்மந்தபட்டது என்று கூறிய அமைச்சர் தற்போது அரசியலுக்கு வருவது அவளோ எளிதாககிவிட்டது என்றும் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை அறிந்தே அரசியலுக்கு வரவேண்டும்; நாடி ஜோசியத்தை பார்த்து அரசியலுக்கு கூடாது என்று ரஜினியை நக்கலாக அமைச்சர் கிண்டலடித்தார்..
DINASUVADU