வேலூர் அருகே அடுத்தடுத்து 7 வீடுகளில் சுமார் 30 சவரன் தங்க நகைகள் கொள்ளை!
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் சுமார் 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூரை அடுத்த பெரியகண்ணாலப்பட்டி கிராமத்தில் நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த தெருவிளக்குகளை அணைத்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர். சுப்பிரமணி எனபவரது வீட்டில் 25 சவரண் தங்க நகைகள், ரூபாய் 30 ஆயிரம் பணமும், கார்த்திகேயன் என்பவரது வீட்டில் 3 சவரன் நகை மற்றும் ரூபாய் 8 ஆயிரமும் கொள்ளைடிக்கப்பட்டன.
இதே போல் அங்குள்ள 5 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், இருசக்கர வாகனங்களில் யாரும் துரத்த கூடாது என்பதற்காக, பெட்ரோல் டேங்க் குழாயைத் துண்டித்து விட்டு தப்பினர். கொள்ளை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
source: dinasuvadu.com