வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் நடந்த சோதனையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் அசுத்தமாக இருந்தது. இதனால் அந்த கம்பெனிக்கு ரூ.5000 அபராதமும், இதேபோல் அதேபகுதியில் ஒரு லெதர் கம்பெனியிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பொருட்கள் இருந்ததால் அந்த கம்பெனிக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்தனர் இச்சம்பவம், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் பாலாஜி தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் டெங்கு தடுப்பு ஆய்வு மேற்கொண்டபோது நடைபெற்றது.