வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு இடையம்பட்டியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி ஆவார்.இவரது மனைவி சுலோச்சனா.இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளன.இந்நிலையில் அண்மையில் சுலோச்சனா தீடீரென்று மாயமாகியுள்ளார். இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.பின்னர் அவர் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்துள்ளனர். அப்போது கிருஷ்ணமூர்த்தியின் சித்தப்பா மகனான ரமேஷ் மதுபோதையில் அவர் ஒரு கொலை செய்துவிட்டதாக கூறி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.இதன் காரணமாக காவல்துறையினர் […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஜம்புகுளம் அடுத்த காட்ரம்பாக்கம் மோட்டூர் பகுதியை சேர்ந்த இளைஞர் சுப்பிரமணி ஆவார்.இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சோளிங்கர்-வாலாஜாபேட்டை சாலையில் ஜம்புகுளம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.பின்னர் தீயணைப்பு துறை அதிகாரிகளின் உதவியோடு சடலத்தை மீட்டுள்ளனர். பின்னர் சடலத்தை பார்த்த காவல்துறையினருக்கு அந்த நபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.இதன் அடிப்படையில் […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் ஆவார்.சுமார் 20 வயதான இவருக்கு வாட்ஸ் அப் மூலம் கார்த்திக்,பாலாஜி என்ற இருவர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று கார்த்திக் ஆனந்தை நாட்றம்பள்ளிக்கு வர சொல்லி கார்த்திக் அழைப்பு விடுத்துள்ளார்.பின்னர் நண்பர்கள் அழைப்பு விடுத்ததை அடுத்து அந்த பகுதிக்கு ஆனந்த் வந்துள்ளார். பிறகு பாலாஜியும் கார்த்திக்கும் சேர்ந்து ஆனந்திடம் பாலியல் ரீதியான ஓரின சேர்க்கையில் தங்களுடன் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.பின்னர் ஆனந்த் அதை […]
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருந்தவர் நிர்மலா.இவர் தனது கணவரை இழந்த பின்பு தனது தாயுடன் அரக்கோணம் அருகில் உள்ள சின்னகைனூரில் வசித்து வருகிறார். தினமும் காலையில் எழுந்தவுடன் இவர்கள் வெளியில் வந்து அக்கம்பக்கத்தினரிடம் பேசுவது வழக்கம்.ஆனால் இவர்கள் சமீபத்தில் வெகுநேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது நிர்மலா ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.அவரின் அருகில் ஒரு அம்மிக்கல்லும் ரெத்தக்கறையுடன் […]
நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் வேலூர் தொகுதியில் மட்டும் அதிக பண பட்டுவாடா இருந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஆகஸ்ட் 5 இல் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இதனை குறிப்பிட்டு, தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமானவர்களையே மீண்டும் பிரதான காட்சிகள் களமிறக்கி உள்ளதாகவும், அவர்களை தேர்தலில் […]
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டில் வேலூர் மக்களவையில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைககளை மீறியதாக கூறி வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5இல் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக சார்பில் கூட்ட்டணி கட்சியான புதிய நீதி கட்சி தலைவரான ஏ.சி.சண்முகம் தான் போட்டிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது,. தற்போது அவர் […]
வேலூர் மாவட்டம் கீழ ஆவதம் கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் சென்று கொண்டிருந்த மின்னல் கிராமத்தை சேர்ந்த வினோத் மற்றும் பார்த்திபன், தட்சணாமூர்த்தியிடம் லிப்ட் கேட்டுள்ளனர். இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, தட்ச்சனாமூர்த்தியை, வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர் பலமாக தாக்கியதில் தட்ச்சனாமூர்த்தி உயிரிழந்தார். கொலையாளிகள் வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அங்கிருந்த தப்பித்து ஓடிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கீழ ஆவதம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு […]
தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலை முன்னிட்டு பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில நாள்களாக முக்கிய தலைவர்களில் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வருமான வரி சோதனையில் பல கோடி ரூபாய்கள் ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்டனர்.இந்நிலையில் வேலூரில் பண விநியோகம் செய்வது எப்படி என கூட்டணி கட்சிகளுடன் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி சம்பத் உரையாடல் வீடியோ வெளியானது. மேலும் அந்த வீடியோவில் ஒரு ஓட்டுக்கு ரூ.500 என […]
நாளை தமிழகத்தில் 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. […]
பழைய பிரியாணியை சாப்பிட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அரக்கோணம், தண்டலம், புதுக் காலனி பகுதியில் வசிப்பவர், சீனிவாசன் மற்றும் கனகா தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் கோபிகா என்ற பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர்கள் பழைய பிரியாணியை பிரிட்ஜில் வைத்து, மறுநாள் கோபிகாவுக்கு சுட வைத்து கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட கோபிகா வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் […]
வேலூர் அரக்கோணம் அருகே 25 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மாசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் கிராமத்தில் தக்கோலம் பகுதியில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அந்த காரை சோதனை செய்ததில் 25 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போதைப்பொருள் கடத்த […]
வேலூர் அருகே சிக்கனாங்குப்பம் ஏரியில் பதுங்கியிருந்த சிறுத்தை தப்பியது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட அறிவிப்பில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சிக்கனாங்குப்பம் ஏரியில் பதுங்கியிருந்த சிறுத்தை தப்பியது. தப்பிச்சென்ற சிறுத்தையை கண்டறிந்து நாளை காலை பிடிக்கப்படும் .சிறுத்தை தப்பியதால் கிராம மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட, டிடிவி தினகரன் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்பூரை அடுத்த ஆலங்குப்பத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஜோலார்பேட்டையை சேர்ந்த சதாம் உசேன் என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து 22 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக வேலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். DINASUVADU
வேலூர் மாவட்டம் திமிறி அருகே தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் கட்டமைப்பு வசதி, அடிப்படை வசதி உள்ளிட்டவை இல்லாததால் இந்த தனியார் தொடக்கப்பள்ளிக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர். ஆயினும் மக்கள் இதை முழுமையாக கடைபிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் அவர்களுக்கு அபராதம் விதிப்பதை விடுத்து, 20 அல்லது 25 பேரை ஒன்றாக சேர்த்து சப்-டிவிசன்களில் […]
வேலூர் சிறையில் இருந்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். 2017இல் செப்டம்பரில் தடையை மீறி பேரணி, அரசுக்கு எதிராக பேசியதாக ராயப்பேட்டை போலீஸ் கைது செய்தது.அதுமட்டும் அல்லாமல் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டார் . இதன் பின்னர் திருமுருகன் காந்தி புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்னதாக […]
அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றப்படுகிறார். தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார்.பின்னர் […]
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல் விலையை சமாளிக்க ஏதுவாக ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று வேலூரில் உள்ள பேக்கரி கடை நிர்வாகம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தினம் ஏறிக் கொண்டே செல்லும் பெட்ரோல் டீசல் விலை இதனை காரணம் காட்டி பல்வேறு பொருட்களின் விலையும் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டு வருகின்றது. அண்மையில் திருமண வீடு ஒன்றில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கி பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை […]
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தினசரி சந்தை வாயிலில் கொட்டப்பட்ட காய்கறிக் கழிவுகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாததால் அவை மங்கிய நிலையில் துர்நாற்றம் வந்துள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளிதரன் இதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து நடுங்கி போனது நகராட்சி நிர்வாகம் நிர்வாகத்தினரை அழைத்த நீதிபதி முரளிதரன்குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறினார். இதனையடுத்து அங்கு குப்பைகள் அகற்றப்பட்டது.உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வந்து கூறும் அளவிற்கு நிற்கிறது […]