2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட, டிடிவி தினகரன் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் கைது…
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட, டிடிவி தினகரன் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்பூரை அடுத்த ஆலங்குப்பத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஜோலார்பேட்டையை சேர்ந்த சதாம் உசேன் என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து 22 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜோலார்பேட்டை வக்கணம்பட்டியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகர துணை செயலாளர் அலேக்சாண்டர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஜெராக்ஸ் மெஷினை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.2 ஆயிரம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் – விசாரணையில் அமமுக நகர துணை செயலாளர் என்பது தெரியவந்தது.
dinasuvadu.com