சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தொடர் தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா நாடுகளிடையேயான வர்த்தகப் போரே காரணம் என கூறுகின்றனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.6) ஒரு கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.7,930க்கு விற்பனையாகிறது. விரைவில் இது ரூ.8000-ஐ தொடலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல், நேற்று 22 கேரட் தங்கம் […]
சென்னை: கடந்த சில தினங்களாக ஏற்றத்திலிருந்த தங்கம் விலை, நேற்று எந்த மற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில், இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து, ரூ.101க்கும், கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,887-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் […]
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது. இந்நிலையில், விலை இன்று திடீரென மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]
நாகை:வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல். நாகை மாவட்டம் கோடியக்கரை கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இன்று காலை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம்,நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கினர். ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும்,மேலும்,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து […]
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள வெள்ளப்பள்ளம் கிராமம், கவுண்டர் தெருவில் வசித்து வருபவர், நாகராஜன். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றார். அப்பொழுது, மீனவர் காலனி வடக்குத் தெருவைச் சேர்ந்த லிங்கம் என்பவர் நாகராஜன் வீட்டின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து திருட முயற்சித்தார். அந்த காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பூட்டை உடைப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதில் அவரின் தலை, முதுகு, […]
வேதாரண்யம் அருகே தனியார் பள்ளியில் ரூ.1,00,000 மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து செல்லப்பட்டது தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி என்ற இடத்தில் தனியார் பள்ளி ஓன்று இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு பள்ளியை வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றனர். அன்று நள்ளிரவு பள்ளிக்குள் புகுந்த திருடன் அங்குள்ள பீரோவில் இருந்த ரூ.52000 பணம் மற்றும் 1 லேப்-டாப், கம்ப்யூட்டருக்கான சாதனங்கள உள்பட ரூ.1,00,000 மதிப்பிலான பொருட்களை […]