திருவண்ணாமலை , திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ரேணுகொண்டாபுரம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவரை, படவேடு மங்களாபுரத்தை சேர்ந்த பசுபதி ஒருதலையாக காதலித்துள்ளார். தினமும் பள்ளிக்கு செல்லும் போதும், மாலை வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போதும் மாணவியை வழிமறித்து அந்த இளைஞர் காதலிக்கச் சொல்லி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவியோ எரிச்சலடைந்து அவரை எச்சரித்துள்ளார். திருந்தாத மனம் கொண்ட பசுபதி, பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவியை […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே செல்போன் கடையில் வாடிக்கையாளர், உரிமையாளர் இடையே நடைபெற்ற கைக்கலப்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. தானிப்பாடி கிராமத்தில் பேருந்து நிலையம் அருகில் மணிகண்டன் என்பவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் தானிப்பாடியை சேர்ந்த கணேசன் என்பவர் செல்போனை சரிசெய்யக் கொடுத்துச் சென்றார். நேற்றிரவு தண்டராம்பட்டைச் சேர்ந்த திமுக நிர்வாகி ரகுபதி மாசிலாமணியுடன் அங்கு சென்ற கணேசன், செல்போனை வாங்கி விட்டு சரியாக வேலை செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் […]
திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவிகள் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை அருகே ஜமுனாமரத்தூரில் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் ஆசிரியை திட்டியதால் 3 மாணவிகளும் விஷம் குடித்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.பின்னர் 3 மாணவிகளுக்கும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று மழை பெய்த்தது. இதனால் குளிர் காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மலை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி சேவூர், காமக்கூர் உட்பட்ட இடங்களில் மலை பெய்தது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
திருவண்ணாமலை அருகே கல்லூரி பேராசியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு தன்னை தவறான பாதைக்கு விடுதிகாப்பாளர் அழைத்ததாக அரசு வேளாண்மை கல்லூரி மாணவி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் பகுதியில் அமைந்துள்ளது அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகின்றது. இதில் கல்லூரி விடுதியில் தங்கி சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வறிக்கை ஒப்படைக்க சமர்பிக்கச் பேராசிரியரிடம் சென்ற அம்மாணவிக்கு பேராசிரியரியரும் […]
திருவண்ணாமலை மாவட்டம் சீப்பந்தலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது . கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். DINASUVADU
சாலையோர மரத்தில் திருவண்ணாமலை அருகே செங்கம் அடுத்த புழுதியர் பகுதியில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் டிரைவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருவண்ணாமலையில் 18 வயது இளம் பெண்ணை வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அருகே செய்யாறு 18 வயது இளம் பெண்ணை வன்கொடுமை செய்ததாக வினோத் என்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இரு சக்கர வாகனங்களில் திருவண்ணாமலையில் தப்பிச் சென்ற சென்னையைச் சேர்ந்த கொள்ளையர்களை, 25 கிலோ மீட்டர் தூரம் அசுர வேகத்தில் துரத்திச் சென்று காவல்துறையினர் பிடித்துள்ளனர்.செய்யாறில் போலீசார் வாகன சோதனையில் நிற்காமல் 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 6 இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர். செய்யாறு – காஞ்சிபுரம் சாலையில் மின்னல் வேகத்தில் சென்ற அவர்களை, போலிசார் இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர்.17 கிலோ மீட்டர் தூரம் விடாது துரத்திய நிலையில், மாங்கால் கூட்டுரோடு சாலையில் […]
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள மலைவாழ் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 4 சிறுவர்கள் கடந்த 9-ந்தேதி நைசாக பேசினர். பிறகு மாணவியை ஜமுனாமரத்தூர் முருகன் கோவில் பின்புறத்தில் உள்ள மலை அடிவாரத்திற்கு அந்த 4 சிறுவர்களும் அழைத்துச் சென்றனர். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால், சிறுமியை மிரட்டி சிறுவர்கள் 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதையடுத்து, யாரிடமும் தங்களை பற்றி […]
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர், களியம் கிராமத்தில் சென்னையில் இருந்து சாமி கும்பிட கோவிலுக்கு சென்றவர்களை கடந்த மே மாதம் 9-ந்தேதி குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கிராம மக்கள் அடித்து உதைத்தனர். இதில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி (வயது 65) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் வந்த உறவினர்களான மோகன்குமார், சந்திரசேகரன், கஜேந்திரன், வெங்கடேசன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு […]
திருவண்ணாமலை அருகே காங்கேயத்தில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் நம்மயேந்தல்லை சேர்ந்த பார்த்திபன், அவரது சகோதரி சத்யா ஆகியோர் உயிரிழந்தனர். சத்யாவின் கணவர் சக்திவேல் படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
பேருந்துகளின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடும் கோபத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பேருந்து கட்டணம் தமிழகம் முழுவதிலும் உள்ள மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக பேருந்துகளில் பயணிப்பதற்கு பதிலாக மக்கள் அதிகமாக மின்சார ரயில்களை நோக்கி வர தொடங்கியிருக்கிறார்கள். இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிகுப்பத்தில் சென்னை-திருப்பதி சாலையில் பேருந்துகளை சிறைபிடித்து, மறியல் நடந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். அதே போல் […]
திருவண்ணாமலையில் கோயிலில் உண்டியல் ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் காணிக்கையை பொருத்து கிடைக்கும் . அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.33 கோடி கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து, இங்குள்ள உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமியன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். பவுர்ணமி முடிந்ததும் அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி மார்கழி மாத பவுர்ணமி […]
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவிக்கு அளித்த பாராட்டு….. நேற்று செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் சிறந்த கல்வி பணி ஆற்றிவரும் முதன்மை கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டார். விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை […]
திருவண்ணாமலை; மாவட்டம் ஆரணி அருகே நகைகளுக்கு பாலீஷ் செய்து தருவதாக கூறி, நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். நாவல்பாக்கம் என்னும் பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி பூபதி என்பவரது வீட்டிற்கு வந்த பீகார் இளைஞர்கள் இருவர், தங்க நகைகளை பாலீஷ் செய்வதாக கூறியுள்ளனர். இதனை நம்பி 2 சவரன் நகைகளை பூபதி கொடுத்த போது அதில் அரை சவரன் தங்கத்தை சோப்புநுரை மூலம் இளைஞர்கள் கொள்ளையடித்துச் […]
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து (வயது 35). இவர் அதே கிராமத்தில் பெயிண்ட் கடை வைத்துள்ளார். இங்கு சிமெண்டு, டைல்ஸ் உள்ளிட்டவை விற்பனை செய்து வந்தார். மேலும் குறிப்பிட்ட நிறுவனத்தின் வெள்ளை நிற சிமெண்டு, டைல்ஸ் உள்ளிட்டவை வைத்து மொத்த வியாபாரம் செய்து வந்தார். அந்த நிறுவனத்தின் வெள்ளை நிற சிமெண்டு, பெயிண்டுகள் தரமற்றவையாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு செய்துள்ளார். கார்த்திகை தீபத்திருநாள் அன்று கார்த்திகை தீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல சுவாமியின் ஆலையமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இதனால் அங்கு இந்த திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம்.