ஏப்.,7 ஆம் தேதி திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் சமூக பரவலாக மாறாமல் தடுக்கும் விதத்தில் 144 தடை உத்தரவு நாடு முழுவது அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலே இருந்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட உள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை: பவுர்ணமி தினத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அவ்வாறு ஏப்., 7 ஆம் தேதி பௌர்ணமியை அடுத்து பக்தர்கள் […]
சிப்காட் தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,613 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 192 நாடுகளுக்கு வேகமாக பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்துள்ளது.அதே போல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,636 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ தொட்டுவிட்ட நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு […]
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உலகின் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை அனைத்து சந்தைகள், மீன் கடைகள், ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்துமே மூடப் பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து திருவண்ணாமலையிலும் இது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 31-ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தையும் மூடப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ஒருவரையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதா .?அதிர்ந்து போன தமிழ் மக்கள். இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த நபர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். சீனாவில் உள்ள வுஹான் நகரத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்துள்ளது.இந்நிலையில் வுஹான் நகரத்தை சேர்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இதன் காரணமாக சீனா அரசு வெளிநாட்டில் உள்ள சீன மக்களை விரைவில் சிறப்பு விமானம் மூலம் தாய் நாட்டிற்கு […]
ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக திருவண்ணாமலைஆட்சியர் செல்பி போட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனவரி மாதம் 24ஆம் தேதி ஆண்டு முழுவதும் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை தற்போதைய ட்ரெண்டில் கொண்டாட திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி புதிய போட்டியை அறிவித்துள்ளார். அந்த போட்டிக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பில், ‘ மூன்று தலைமுறை பெண்களுடன் அதாவது பாட்டி, அம்மா […]
திருவண்ணாமலை வந்தவாசியில் உள்ள பிரபலமான துணிக் கடையின் 51-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 5 ரூபாய்க்கு சேலையும், 1 ரூபாய்க்கு லுங்கியும் விற்பனை செய்யப்பட்டது. கூட்டத்தில் சிக்கிய அக்கடையின் பெண் ஊழியர் ஒருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள பிரபலமான துணிக் கடையின் 51-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 3 தினங்களுக்கு 5 ரூபாய்க்கு சேலையும், 1 ரூபாய்க்கு லுங்கியும் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து காலையில் இருந்தே கடை […]
இயந்திரத்தில் கழுத்தில் அணிந்திருந்த துணி சிக்கி கழுத்து இறுக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது திருப்பூர் அருகே பரிதாபம் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை இவர் திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையத்தின் பிரிவு அருகே ஒரு இறைச்சிக்கடையொன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.சம்பவத்தன்று பணி முடிந்த நிலையில் இறைச்சி வெட்ட பயன்படுத்தக்கூடிய கட்டையை அரவை இயந்திரம் மூலமாக சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த அரவை இயந்திரத்தில் ஏழுமலை தன் கழுத்தில் அணிந்திருந்த துணியானது […]
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர்கள் எதிர்ப்பையும் மீறி மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை அளித்ததே உயிரிழப்புக்கு காரணம். திருவண்ணாமலை உள்ள செய்யாறு அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வினித்ரா என்ற பெண் பிரசவத்திற்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு சுக பிரசவம் இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், வினித்ரா […]
திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது.முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றப்பட்டது.அதன் படி அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இந்நிலையில் திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் சுமார் 20 இலட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பக்தர்கள் வருகை […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவரின் மனைவி சோலையம்மாள். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் கடந்த 14-ம் தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் ஐந்தாவது குழந்தையாக சோலையம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் 16-ம் தேதி மருத்துவமனையில் இருந்து சோலையம்மாள் காணாமல் போய்விட்டார். இதனால் மருத்துவர் ஆனந்தன் ஆரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் சென்னையில் சோலையம்மாளையும் , அவரது காதலரான குமாரின் அண்ணன் […]
காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்க்கும் தொழிலை செய்து வருகிறார். இவர், தனது பெற்றோர்களை காண செய்யாறு அருகே உள்ள வேல்சோமசுந்தரம் பகுதிக்கு சென்றார். அப்பொழுது அங்கு உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடிக்க சென்றுள்ளார். அந்த சமயம் காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சதீஷ்குமாரை தாக்கினார்கள். ரத்த காயங்களுடன், அங்கு வந்த தனியார் பேருந்து ஒன்றின் ஏறினார் […]
திருவண்ணாமலையில் உள்ள தியாகி அண்ணாமலை தெருவில் வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார்.அங்குள்ள ஒரு பள்ளியில் இவரது 8 வயது மகன் ரகுநாதன் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக திண்டிவனம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது தாலுகா அருகில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள விளக்கின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு மூடி வைக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் ஜூலை 9-ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாப்பட்டு சம்பந்தனூர் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன் ஆவார்.இவர் அவரின் மனைவியின் 35 வயதான ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கணிணி தொழில்நுட்பத்தின் மூலம் அந்த பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணமாக இருப்பது போன்று செய்து வாட்ஸ ஆப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார். இதனை அறிந்த அந்த பெண் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது நரேந்திரனும் அவரது மனைவியும் அவரை தாக்கி இனிமேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் கொலை செய்துவிடுவதாக […]
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவை முலம் கருத்து சொல்வதில் வல்லவர் மடமையை தனது காமெடி மூலம் கலாய்த்து தள்ளுவதில் மிக நேர்த்தியாக செயல்படுவார். அதே சமயம் விழிப்புணர்வு அளிப்பதில் என்றுமே அவர் தவறியதில்லை காமெடி முதல் தற்போது கன்று நடுவது வரை,திருவண்ணாமலை என்றாலே மலை தான் எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.தெய்வத்தை தரிசிக்க சென்ற நாம் தெய்வம் படைத்த இயற்கையை நாம் மறந்து விட்டு வருகிறோம். இந்நிலையில் தான் நடிகர் விவேக் திருவண்ணாமலையில் 10 ஆயிரம் […]
தி.மு.க கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி தேர்தல் நேரத்தில் தி.மு.க பொய்யான அறிக்கைகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதாக முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்தார். அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கள்ளக்குறிச்சி வேட்பாளர் எல் கே சுதீஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இதை தொடர்ந்து இன்று வேலூர் ஜோலார்பேட்டையில், திருவண்ணாமலை மக்களவை தொகுதி வேட்பாளர் அக்ரி […]
ஆரணியில் குடும்பத்தகராறு காரணமாக 300 அடி செல்போன் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏத்துவாபட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ்.இந்நிலையில் ரமேஷுக்கும் அவரது மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில்ரமேஷ் அந்த ஊரில் உள்ள 300 அடி செல்போன் கோபுரத்தில் ஏறிய ரமேஷ் கீழே விழுந்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து ரமேஷின் உறவினர்கள் காவல்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் […]
சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி யோகா ஆசிரியர் ஒருவர், ஆணி படுக்கையில் யோகாசனங்கள் செய்துள்ளார். திருவண்ணாமலையில் சுவாமி விவேகானந்த யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் சார்பில் யோகா ஆசிரியர் கல்பனா, உலக சாதனை முயற்சியாக இதனை செய்து காண்பித்தார். சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சைவ உணவின் முக்கியத்துவத்தினை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் ஆணி படுக்கையில் அமர்ந்து ஆசனங்களை செய்தார். 2 ஆயிரத்து 555 இரும்பு ஆணிப்படுக்கையில் இருந்து கொண்டு தனூர் ஆசனம், […]
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் பூட்டியிருந்த பள்ளியை திறந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். ஆசிரியர்கள் போராட்டத்தால், ஜவ்வாதுமலை ஒன்றிய மலையடிவாரத்தில் உள்ள அரசு பள்ளி, பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதனையறிந்த கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம், தற்காலிக ஆசிரியர்களுடன் அங்கு சென்று பள்ளியை திறந்தார். பின்னர் மாணவர்களுக்கு அவரே ஆங்கில பாடம் நடத்தினார். தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பள்ளி தொடர்ந்து இயங்கும் என்றும் பள்ளிக்கு சரியாக வர வேண்டும் என்றும் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ […]
திருவண்ணாமலை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவ மழை இல்லாததால் காரணத்தால் குறைந்த அளவு நீர் தேவைப்படும் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர்.அந்த வகையில் விவசாயிகள் பயிரிட்ட பச்சை மிளகாய் பனியின் தாக்கத்தால் மகசூல் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனையாவதால் தங்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.