குறைந்த விளைச்சல் , அதிக லாபம்…. மிளகாய் விவசாயிகள் மகிழ்ச்சி…!!
திருவண்ணாமலை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவ மழை இல்லாததால் காரணத்தால் குறைந்த அளவு நீர் தேவைப்படும் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர்.அந்த வகையில் விவசாயிகள் பயிரிட்ட பச்சை மிளகாய் பனியின் தாக்கத்தால் மகசூல் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனையாவதால் தங்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.