மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது…!!
10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல்தொந்தரவு கொடுத்த புகாரில்திருவண்ணாமலை கணித ஆசிரியர்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கம் அருகேயுள்ள கண்ணக்குருக்கை மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கண்ணன். கணித ஆசிரியரான இவர், அப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள மாணவியின் தந்தை தனது கட்சிக்காரர்களுடன் சென்று ஆசிரியர் கண்ணனை நேற்று கடுமையாகத் தாக்கினார். இதில் அவரின் மண்டை உடைந்தது. அத்துமீறி தாக்கியவர்கள் மீது பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
கணித ஆசிரியர் கண்ணன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று அவர் கைது செய்யப்பட்டார். அத்துமீறி பள்ளி வளாகத்தில் நுழைந்து வகுப்பறையில் பாடம் நடத்திய ஆசிரியரை தாக்கிய மூர்த்தி, சோலைமணி, சந்தோஷ், உள்பட 10 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் பாச்சல் காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
DINASUVADU