திருவண்ணாமலை ,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முதலாவது மாநிலக்குழுக்கூட்டம் 2018 செப் 15,16 தேதிகளில் திருவண்ணாமலையில்
நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமுஎகச மாநிலத்தலைவர் சு. வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
1. பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தடை:
இறை நம்பிக்கையும் வழிபாட்டுணர்வும் குடிமக்களின் தனிப்பட்ட தேர்வு. விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதும் கூட இவ்வகையானதே. ஆனால், இப்போது விநாயகர் சதுர்த்தி என்பது பிள்ளையார் சிலைகளை தத்தமது வீடுகளில் வைத்து வணங்கிவிட்டு நீர்நிலைகளில் கொண்டுபோய் கரைத்து விடக்கூடிய பக்தர்களின் தனிப்பட்ட விவகாரமல்ல. அது மக்களை மதரீதியாக பாகுபடுத்தவும், மதவாத வெறியேற்றவும், வெறுப்பரசியலை கிளறிவிட்டு சிறுபான்மையர் மீது வன்முறைகளை நிகழ்த்துவதற்குமான சங் பரிவாரத்தின் நிகழ்ச்சிநிரலாக மாறியுள்ளது. சங் பரிவார அமைப்புகள் பெருநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை பொது இடங்களில் பெரும் முதலீட்டில் பிரம்மாண்டமாய் பிள்ளையார் சிலைகளை நிறுவுகின்றன.
இதனால் போக்குவரத்தில் மாற்றம், மின்சார நிறுத்தம், சோதனைக் கெடுபிடிகள் என மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நச்சுத்தன்மையுள்ள வேதிக்கலவைகளால் செய்யப்படும் இந்தச் சிலைகளைக் கரைப்பதால் நீர்நிலைகளும் மாசடைகின்றன. சிலை வைப்பு, பாதுகாப்பு, வழிபாடு, கரைப்பு ஊர்வலம் என இதனோடு தொடர்புடைய வேலைகளுக்காக திரட்டப்படும் சிறார்களும் இளைஞர்களும் மதவெறி நஞ்சேறிய சங்பரிவார வன்முறையாளர்களாக சீரழிக்கப்படுகின்றனர். இவர்களால் சிறுபான்மைச் சமூகத்தவரின் உயிருக்கும் உடைமைக்கும் பொது அமைதிக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சங் பரிவாரத்தினரின் இத்தகைய சட்டவிரோத சமூகவிரோதச் செயல்களுக்கு, பொது இடங்களில் பிள்ளையார் சிலை வைக்க அனுமதிக்கப்படுவதும் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே, பொது இடங்களில் பிள்ளையார் சிலை வைப்பதை அரசு தடை செய்து, பிள்ளையார் வழிபாட்டை அவரவரது தனிப்பட்ட நடவடிக்கையாக அறிவிக்க வேண்டுமென தமுஎ தமிழக அரசை தமுஎகச மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது என்று அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
DINASUVADU
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…