திருவண்ணாமலை மகா தீப தரிசனத்துக்கான டிக்கெட்- இன்று முதல் இணையதளத்தில் விற்பனை…!!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, பரணி, மகா தீப தரிசனத்துக்கான டிக்கெட்டுகள், இன்று முதல் இணையதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2 ஆயிரத்து 668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதையொட்டி, பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதற்கான டிக்கெட்டுகள், இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணி முதல் கோயில் இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும், டிக்கெட் பதிவு செய்ய ஆதார் எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கண்டிப்பாகத் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com