திருவண்ணாமலையில் யோகி ராம் சுரத்குமாரின் 100வது ஜெயந்தி விழா….!!
யோகி ராம் சுரத்குமாரின் 100வது ஜெயந்தி விழா அவரது பக்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் யோகி ராம்சுரத்குமாரின் திருவுருவம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் யானை, குதிரைகள் அணிவகுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள், யோகி ராம்சுரத்குமாரின் ஸ்லோகங்களை கூறியபடியே கிரிவாலப் பாதையை சுற்றி வந்தனர்.