திமுகவினரின் ரௌடிஷம் தொடர்கிறது” சமாளிப்பாரா முக.ஸ்டாலின்..!!
திருவண்ணாமலை அருகே தண்டல் பணம் கேட்டு தி.மு.கவினர் தாக்கியதால், மனமுடைந்த பேன்சி ஸ்டோர் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியில் ராஜேஷ் என்பவர் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த திமுக அடிப்படை உறுப்பினர்களான பூபாலன், பவுன்குமாரிடம் தண்டல் பணம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பணம் கொடுக்க தாமதமானதால், தி.மு.க -வினர் பூபாலன், பவுன்குமார் ஆகியோர், பேன்சி ஸ்டோர் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியும், செருப்பால் அடித்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய திமுகவினர் அடுத்து பேன்சி கடையில் உள்ள பெண்ணை அடித்த திமுகவினர் என தொடர்ந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை சம்பவம் திமுக தலைமையை முகம் சுளிக்க வைத்துள்ளது.இதை ஸ்டாலின் சமாளிப்பாரா என்று பேசப்படுகிறது.
DINASUVADU