”செல்போனை சரியாக சர்வீஸ் செய்யவில்லை”உரிமையாளர் மண்டை உடைப்பு..!!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே செல்போன் கடையில் வாடிக்கையாளர், உரிமையாளர் இடையே நடைபெற்ற கைக்கலப்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
தானிப்பாடி கிராமத்தில் பேருந்து நிலையம் அருகில் மணிகண்டன் என்பவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் தானிப்பாடியை சேர்ந்த கணேசன் என்பவர் செல்போனை சரிசெய்யக் கொடுத்துச் சென்றார். நேற்றிரவு தண்டராம்பட்டைச் சேர்ந்த திமுக நிர்வாகி ரகுபதி மாசிலாமணியுடன் அங்கு சென்ற கணேசன், செல்போனை வாங்கி விட்டு சரியாக வேலை செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் கைக்கலப்பாக மாறவே, கணேசனும், ரகுபதி மாசிலாமணியும் சேர்ந்து உரிமையாளர் மணிகண்டனை தாக்கினர். இதில் அவரின் மண்டை உடைந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கணேசன் மற்றும் ரகுபதி மாசிலாமணி ஆகிய இருவரையும் தானிப்பாடி காவல்துறையினர் கைது செய்தனர்.
DINASUVADU