திருவண்ணாமலை; மாவட்டம் ஆரணி அருகே நகைகளுக்கு பாலீஷ் செய்து தருவதாக கூறி, நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். நாவல்பாக்கம் என்னும் பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி பூபதி என்பவரது வீட்டிற்கு வந்த பீகார் இளைஞர்கள் இருவர், தங்க நகைகளை பாலீஷ் செய்வதாக கூறியுள்ளனர். இதனை நம்பி 2 சவரன் நகைகளை பூபதி கொடுத்த போது அதில் அரை சவரன் தங்கத்தை சோப்புநுரை மூலம் இளைஞர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் பொதுமக்கள் அவர்களை கண்டுபிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். நகையை திருடுகூதற்கு பயன்படுத்தபட்ட பொருட்கள் கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. தங்க நகைகளை கொள்ளையடிக்க பீகாரை சேர்ந்த கும்பல் ஆங்காங்கே சுற்றித்திரிவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்…
sources; dinasuvadu.com
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…