ஒரே குடும்பத்தை சேர்த்த 6 பேர் கொலை செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு. திருவண்ணாமலை மாவட்டம் ஒரேவந்தவாடி அருகே குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். மனைவி மகன் மற்றும் நான்கு மகள்களை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் ஆட்டு கொட்டகையின் மீது புளியமரம் விழுந்ததால், 10 ஆடுகள் உயிரிழப்பு. நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும் அதிக காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே ஆலந்தூரில் பச்சையப்பன் என்பருக்கு சொந்தமான ஆட்டு கொட்டகையின் மீது புளியமரம் ஒன்று விழுந்துள்ளது. இதனால் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
2,668 அடி உயர மலை உச்சியில் திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது. இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் மிக முக்கியமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பிரசித்திபெற்ற ஒன்றாகும். இன்று மாலை 6 மணிக்கு இங்கு மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும். அதே போல சரியாக 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீப தரிசனத்தை நேரில் காண திருவண்ணாமலைக்கு […]
திருவண்ணாமலையில் மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் இன்னும் சில மணிநேரத்தில் ஏற்றப்பட உள்ளது. இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் மிக முக்கியமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பிரசித்திபெற்ற ஒன்றாகும். இன்று மாலை 6 மணிக்கு இங்கு மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதனை காண தமிழகமெங்கிலும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் […]
திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்கள் விடுமுறை. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இ 10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை, வேங்கிக்கால் ஏரிக்கரை, […]
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இ 10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்கம். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது, கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு. திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. பக்தர்களின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாகவும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி தீபத்திருவிழா […]
திருவண்ணாமலையில் பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டால், அதற்கு அனுமதி கொடுத்த அணைத்து அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று தனது ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி ஊழியர்கள் என அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் பேசுகையில், ‘ திருவண்ணமலை ஓர் ஆன்மீக நகரம். நாள் தோறும் இங்கு வெவ்வேறு ஊர்களில் […]